ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு
![ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு](https://tn96news.com/wp-content/uploads/2023/07/64cb6551-7b47-4343-95d4-1fe6a8304529-850x560.jpg)
கோவில்பட்டியை சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 68). ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர் கடந்த மாதம் 27-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு சென்றார்.
அங்கு சில நாட்கள் தங்கி இருந்து விட்டு . பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்., உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/07/school-admk1-1024x1024.png)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)