பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம்
மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பா.ஜனதா கட்சியினர் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முன்பிருந்து ஊர்வலமாக சென்று ஒவ்வொரு கடைகள் மற்றும் வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சீனிவாசன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட துணை தலைவர் பால முருகேசன், மேற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி, அரசு தொடர்பு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் கலையரசி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.