அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் : ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க டி. ஜெயக்குமார் வலியுறுத்தல்

 அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் : ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க டி. ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட குழந்தையை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்த்தனர்.
பின்னர் குழந்தையின் பெற்றோரை சந்தித்து மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தனர். அப்போது குழந்தையின் தாய் விவரமாக எடுத்து கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-

மருத்துவதுறை அம்மா காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. ஆனால் திமுக ஆட்சி யில் அரசு மருத்துவமனை குறித்து நம்பிக்கையற்ற சூழ்நிலை உள்ளது.

மருத்துவத்துறை
உயிருடன் விளையாட கூடாது. அரசு விழிப்புடன் இருந்து துறை அமைச்சர் கவனத்துடன் செயல்பட்டு இருக்க வேண்டும்.
அமலாக்கதுறை துரத்துகிறது ஒடலாம் வாங்க என்ற வகையில் தான் செயல்படுகிறார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சாதாரண சிகிச்சைக்காக சென்று உயிர் இழந்தார்.தலைமை காவலரின் குழந்தை கால் செயல் இழந்து கிடக்கிறது.
தலைமைசெயலகத்தில் காவலர் அழுது புலம்பினார்.
இதெல்லாம் இந்த அரசின் மருத்துவத்துறையின் எடுத்துக்காட்டுகள்.
ராமநாதபுரம் குழந்தை தலையில் நீர் கசிவு பிரச்சினையை சரியாக பார்த்திருந்தால் அனைத்தும் சரியாக நடந்திருக்கும்.

குழந்தையை மாற்றுத்திறனாளி ஆக மாற்றிவிட்டனர் என தாய் அஜிஷா அழுகிறார்.

அரசு விழிப்போடு இருந்திருந்தால் இந் நிகழ்வை தவிர்த்து இருக்கலாம் .கை அகற்றப்பட்ட பின்னர்
3 பேர் குழுவால் குழந்தையின் கை கிடைத்துவிடுமா?.குழந்தைக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் கூறிய விஷயங்களை டி. ஜெயக்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://fb.watch/lzT4KAgb1y/?mibextid=Nif5oz

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *