கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா; ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை

 கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா; ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை

ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரும் ழுழுநிலவு (பவுர்ணமி ) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை  (ஆசிரியரை) போற்றும் முகமாக  குருவழிபாடு என்னும் குரு பூஜை  செய்வார்கள்.

இதனை துறவிகள், வியாச பூஜை  என்றும் வியாச பூர்ணிமா  என்றும் அழைப்பர். மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி. பகவத் கீதை அருளிய கிருஷ்ணர் , வேதங்களை தொகுத்த  வியாசர், உபநிடதங்களுக்கு கு விளக்கம் எழுதிய  ஆதி சங்கரர், மத்வர் மற்றும் ராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

அந்த வகையில் கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று 3.7.2023 குரு பூர்ணிமா வைபவம்  கோவில்பட்டி ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி கோவில்பட்டி டவுண் பால விகாஸ் பிரிவின் சார்பாக  நடைபெற்றது.

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படியும், பள்ளி பொருளாளர் ரத்னராஜா மற்றும் பள்ளி குழு உறுப்பினர்கள் தாழையப்பன் தங்கமணி, .பால்ராஜ், .மனோகரன் செல்வம் ஆகியோரின் ஆலோசனையின்படியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர், அவர்கள் தங்களுக்கு  பயிற்றுவிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு பாத பூஜை செய்து அவர்களின் பூரண ஆசி பெற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் பிரபு அறிமுக உரை நிகழ்த்தினார். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் கன்வீனர் ராமகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்.  பால விகாஸ் பிரிவின் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வி. ரகுபதி ராஜலட்சுமி மற்றும் சாய் சமிதி அன்பர்கள் கலந்து கொண்டனர்.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *