தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு தீக்குச்சி ஆலை சார்பில் இழப்பீடு தொகை வழங்கல்
![தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு தீக்குச்சி ஆலை சார்பில் இழப்பீடு தொகை வழங்கல்](https://tn96news.com/wp-content/uploads/2023/07/1369730-39-e1688447882986-850x560.webp)
கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள் (வயது 63)என்பவர் உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார். இன்னொரு பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பலியான மாரியம்மாள் குடும்பத்தினருக்கு ஆலை நிர்வாகத்தினர் ரூ.4½ லட்சம் இழப்பீடு தருவதாக கூறி, அன்றைய தினம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மீதித்தொகையான ரூ.1½ லட்சத்தை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மூதாட்டியின் மகள்கள் குடும்பத் தினருடன், சி.ஐ.டி.யு. அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-1-1-1-1024x1024.jpg)
அவர்களுடன் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஆலை நிர்வாகத்தின் சார்பில் ரூ.1½ லட்சத்திற்கான காசோலையை வருவாய் ஆய்வாளர், இறந்துபோன மாரியம்மாள் குடும்பத்தினரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)