எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.38-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டப்பட உள்ளது.. மேலும் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.600-லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற இருக்கிறது.
இந்த பணிகளை கனிமொழி எம்.பி.அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் அமைச்சர் .பெ.கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜகிருஷ்ணம்மாள், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் க(ம)ப \.தம்பிரான் தோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.