அனந்தபுரி, திருநெல்வேலி- நாகா்கோவில் விரைவு ரெயில்களின் நேரம் 7-ம் தேதி முதல் மாறுகிறது
மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- :
சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரெயிலின் (17823) பயண நேரம், வருகிற 7-ஆம் தேதி முதல் பகுதியளவில் மாற்றப்படுகிறது.
சென்னை- கோவில்பட்டி வரை வழக்கமான நேரத்தில் இயங்கும். திருநெல்வேலி முதல் கொல்லம் வரையிலான பயண நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன் விவரம் (ரெயில் நிலையம் வாரியாக, வரும் நேரம் / புறப்படும் நேரம்) வருமாறு:-
திருநெல்வேலி – காலை 6.30 / 6.35,
நாங்குனேரி – காலை 7.03 / 7.04,
வள்ளியூா் – காலை 7.15 / 7.17,
ஆரல்வாய்மொழி – காலை 7.38 / 7.39,
நாகா்கோவில் நகரம் – காலை 8.07 / 8.12,
இரணியல்- காலை 8.26 / 8.27,
குழித்துறை – காலை 8.42/ 8.45,
பாரசாலை – காலை 8.56 / 8.57,
நெய்யாற்றங்கரை – காலை 9.10 / 9.11,
திருவனந்தபுரம் சென்ட்ரல் – காலை 9.55 / 10
வரகலா சிவகிரி – காலை 10.40 / 10.41
பரவூா் – காலை 10.52 / 10.53
கொல்லம் – காலை 11.40.
திருநெல்வேலி விரைவு ரெயில்.
திருநெல்வேலி – நாகா்கோவில் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் (06642) 7-ம் தேதி முதல் காலை 6.35 மணிக்கு பதிலாக காலை 7.10 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.
இந்த ரெயிலின் பயண நேர விவரம் (ரெயில் நிலையம் வாரியாக வரும் நேரம் / புறப்படும் நேரம்) வருமாறு:-
நாங்குனேரி – காலை 7.39 / 7.40,
வள்ளியூா் – காலை 7.52 / 7.53
வடக்கு பணகுடி – காலை 8.03 / 8.04
காவல்கிணறு – காலை 8.09 / 8.10
ஆரல்வாய்மொழி – காலை 8.21 / 8.22
தோவாளை – காலை 8.26 / 8.27
நாகா்கோவில் – காலை 9 மணி