மத்திய அரசு தங்கப்பத்திரம் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப்பத்திரம் விற்பனை, அஞ்சலகங்கள் மூலமாக இன்று (19-ந்தேதி) தொடங்கியது. வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5926 ஆகும். கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்களிலும், அனைத்து துணை தபால் நிலையங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறும். தங்கம்,பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதி […]
கோவில்பட்டி சென்டிரல் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஜெயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. சென்டிரல் அரிமா சங்க முன்னாள் ஆளுனர் சுரேந்திரன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினர். அதன்படி தலைவராக வக்கீல் சிவ ராஜகோபால், செயலாளராக சுப்பிரமணியன், பொருளாளராக கனகசபாபதி ஆகியோர் பதவியில் அமர வைக்கப்பட்டனர், இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் நாராயணசாமி , அரிமா ராஜாமணி, ரீஜெண்ட் உரிமையாளர் ஹரிபாலகன்,அரிமா சங்கத்தை சேர்ந்த செலவின் சுந்தர், சக்திவேல்ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர், சிறப்பு […]
கோவில்பட்டியில் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் புகைப்பட கண்காட்சி நாளை தொடக்கம்; கனிமொழி,
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக ” அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ” என்ற தலைப்பில் 4 நாள் புகைப்படக் கண்காட்சி நாளை 20.6.2023 தேதி முதல் 23.6.2023 தேதி வரை கோவில்பட்டி மேட்டுக் காளியம்மன் கோவில் அருகில் அமைந்திருக்கும் கம்மவார் டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. காலை 10.30 மணி அளவில் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசா கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சுடலை வரவேற்றார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் மணிகண்டன், பொதுச் செயலாளர் சேக்கிழார், பொருளாளர் பாஸ்டின் ராஜ், சங்க நிர்வாகிகள் முத்தையா, முருகானந்தம், சுப்பிரமணியன், கோபால், ராஜாங்கம் மற்றும் பலர் பேசினார்கள். கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட […]
கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம் அருணாச்சல ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக யோகா தினம் மற்றும் சிறார்கள் வன்கொடுமை தடுப்பை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மைக்ரோ பாயிண்ட் கல்வி மையத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அருணாச்சலம் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அசோக்குமார், தலைமையில் மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம் நிறுவனத் தலைவர் ஆம்ஸ்டிராங், வழக்கறிஞர் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன்,ஆகியோர் முன்னிலையில் 9 வயது மாணவி ரவீனா […]
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி ஐயன் மற்றும் போலீசார் கோவில்பட்டி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கோவில்பட்டி மகாராஜபுரம் காலனியில் ஒரு வீட்டின் முன்புள்ள காலி இடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அங்கு நின்று கண்காணித்த போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து மூட்டைகளை இறக்கினார்.அவரைப் பிடித்து விசாரித்த போது பாளையங்கோட்டை கோட்டூர் […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் அம்மா பூமாதேவி ஆலயம் குருபாததரிசன பரிபாலன அறக்கட்டளை ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி மணி, தலைமை தாங்கினார்.காவல் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார் அரசு ஒப்பந்ததாரர் சுப்புராஜ் சங்கரேஸ்வரி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் பழனி முருகன், அம்மா பூமாதேவி ஆலயம் லட்சுமணன் […]
கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 61). இவர் நாகலாபுரம் அருகே என். வேடப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் கடந்த 12.6.2008 அன்று ஓய்வூதியம் பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால் சண்முகவேல் கோவில்பட்டியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சம் கடனாக பெற்றிருந்ததால், அவருக்கு தடையில்லா சான்றிதழை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் […]
இந்திய விடுதலைப்போராட்டத் தியாகி வாஞ்சிநாதன் 112வது நினைவு தினம் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சார்பாக கோவில்பட்டி காயத்திரி திருமண மண்டபத்தில் கடைபிடிக்கப்பட்டது. விழாவிற்கு அபிராமி முருகன் தலைமை தாங்கினார், வழக்கறிஞர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநிலச்செயலாளர் க.தமிழரசன், வழக்கறிஞர் ஜெயஶ்ரீ மற்றும் முனைவர். ஆ.சம்பத்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் காயத்ரி திருமண மண்டப நிர்வாகி ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு காமராஜர் […]
கோவில்பட்டி பங்காளத்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி பூமாரி என்ற முத்துமாரி (வயது 57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பூமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் தங்க நகையை பறித்து விட்டு சென்றனர். அதே போன்று கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த கதிரேசன் கோவிலை சேர்ந்த வெள்ளத்தாய் (44) என்பவரிடம் மோட்டார் […]