திருக்குறள் அதிகாரத்துக்கு ஏற்ப 133 யோகாசனங்கள் செய்து அசத்திய மாணவி ரவீனா
![திருக்குறள் அதிகாரத்துக்கு ஏற்ப 133 யோகாசனங்கள் செய்து அசத்திய மாணவி ரவீனா](https://tn96news.com/wp-content/uploads/2023/06/IMG-20230618-WA0179-850x560.jpg)
கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம் அருணாச்சல ஆன்மீக அறக்கட்டளை இணைந்து நடத்திய உலக யோகா தினம் மற்றும் சிறார்கள் வன்கொடுமை தடுப்பை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மைக்ரோ பாயிண்ட் கல்வி மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அருணாச்சலம் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அசோக்குமார், தலைமையில் மைக்ரோ பாயிண்ட் கல்வி மையம் நிறுவனத் தலைவர் ஆம்ஸ்டிராங், வழக்கறிஞர் கருப்பசாமி, தொழிலதிபர் நடராஜன்,ஆகியோர் முன்னிலையில் 9 வயது மாணவி ரவீனா 133 திருக்குறள் அதிகாரத்திற்கு 133 யோகாசனங்கள் செய்து அசத்தினர்.
இந்த யோகா நிகழ்ச்சியை சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் தொடங்கி வைத்தார்.133 திருக்குறள் அதிகாரத்துக்கு 133 ஆசனங்கள் செய்த மாணவி ரவீனாவுக்கு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/IMG-20230618-WA0324-1024x512.jpg)
இந்நிகழ்ச்சியில் விஜயன், விடிவெள்ளி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஷீலா ஜாஸ்மின், தொழிலதிபர் ராமராஜ், சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா கழக நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-1-1-1-1024x1024.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)