கோவில்பட்டி சென்டிரல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
![கோவில்பட்டி சென்டிரல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு](https://tn96news.com/wp-content/uploads/2023/06/aa035368-d877-40d1-80d0-8d23db2e336a-850x560.jpeg)
கோவில்பட்டி சென்டிரல் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஜெயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. சென்டிரல் அரிமா சங்க முன்னாள் ஆளுனர் சுரேந்திரன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினர்.
அதன்படி தலைவராக வக்கீல் சிவ ராஜகோபால், செயலாளராக சுப்பிரமணியன், பொருளாளராக கனகசபாபதி ஆகியோர் பதவியில் அமர வைக்கப்பட்டனர்,
இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் நாராயணசாமி , அரிமா ராஜாமணி, ரீஜெண்ட் உரிமையாளர் ஹரிபாலகன்,அரிமா சங்கத்தை சேர்ந்த செலவின் சுந்தர், சக்திவேல்ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
சிறப்பு விருந்தினர் சிவகாமி, ஆறுமுகம், பொன் ஸ்ரீ ராம், எட்டப்பன் மற்றும் மிட் டவுன் அரிமா சங்கம்,டைனமிக் அரிமா சங்கம் ,பேசன் அரிமா சங்கம், டைனமிக் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
![](https://tn96news.com/wp-content/uploads/2023/05/school-adm-kvp-5-1024x1024.png)
புதிய உறுபினர்களை கிருபா ராஜ்குமார் அரிமா இயக்கத்தில் சேர்த்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும்சேவை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு புடவை, கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, ஆவல்நத்தம் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன, முடிவில் ராஜாமணி நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)