இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் அம்மா பூமாதேவி ஆலயம் குருபாததரிசன பரிபாலன அறக்கட்டளை ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி மணி, தலைமை தாங்கினார்.காவல் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார் அரசு ஒப்பந்ததாரர் சுப்புராஜ் சங்கரேஸ்வரி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் பழனி முருகன், அம்மா பூமாதேவி ஆலயம் லட்சுமணன் சுவாமி, ஐஸ்வர்யா கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கி ராஜா மற்றும் செவிலியர்கள், உள்ளிட்ட அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்