இளநிலை மருத்துவப் படிப்பில் பொது கவுன்சிலிங்: மத்திய அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. 2011-ல் விடியா தி.மு.க. ஆட்சியில் 1,945 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள், 2021-ல் அம்மாவின் ஆட்சியில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களையும் சேர்த்து சுமார் 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும். அம்மாவின் அரசு ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் […]