• May 20, 2024

கோவில்பட்டி நகரில் சீரான குடிநீர் வினியோகம்; நகரசபை தலைவர் பேட்டி

 கோவில்பட்டி நகரில் சீரான குடிநீர் வினியோகம்; நகரசபை தலைவர் பேட்டி

கோவில்பட்டி நகரசபை தலைவர் கா.கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்பட்டி நகராட்சியில் வார்டு எண்.20, 22 ஆகிய பகுதிகளில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது குடிநீர் குழாய் பதிக்காமல் விட்டுவிட்டனர். ஆனாலும், அந்த வார்டுகளில் பழைய குடிநீர் குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பகுதியில் உள்ள 8 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வராமல் இருப்பதாக புகார் வந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த 8 வீட்டுஉரிமை யாளர்களும் நகராட்சிக்கு குடிநீர் பராமரிப்பு கட்டணமான ரூ.500-ஐ செலுத்தவில்லை. ஆனாலும் குடிநீர் அத்தியாவசியம் என்பதால் நகராட்சி மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாரி மூலமும் குடிநீர் வழங்கி வருகிறோம்.

இதற்கிடையே 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அரசியல் உள்நோக்கத்தோடு் 4 ஆண்டுகளாக வார்டு முழுவதும் குடிநீர் வரவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினரிடம் பொய் புகார் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், பாராளுமன்ற உறுப்பினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *