கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு ; 6-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சென்றனர்
![கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு ; 6-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சென்றனர்](https://tn96news.com/wp-content/uploads/2023/06/a7010747-f6cc-4f31-b7f1-bf8e2e5ba480-850x560.jpeg)
கோவில்பட்டி காமராஜ் இண்டர்நேஷனல் அகாடமியில் மாணவர்கள்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி 2 முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-ம் வகுப்பு முதல் 12 வரையிலான மாணவ, மாணவிகள் இன்று பள்ளிக்கு சென்றனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
கோவில்பட்டியில் உள்ள அணைத்து பள்ளிகளும் இன்று கோடைவிடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன. நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்து இருந்தனர்.
அவர்கள் வகுப்பறை வரை சென்று பிள்ளைகளை விட்டு சென்றனர். மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கனிவுடன் வரவேற்றனர். வெகு நாட்களுக்கு பிறகு சாலைகளில் இன்று பள்ளிக்கூட வேன்களை பார்க்க முடிந்தது,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)