• May 20, 2024

Month: April 2023

கோவில்பட்டி

பா.ஜனதா சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்

கோவில்பட்டியில் எட்டையபுரம்ரோட்டில் உள்ள சிவா திருமண மண்டபத்தில் டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் நடைபெற்றது பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி பொதுச் செயலாளர் வேல் ராஜா கிஷோர் குமார் துணைத் தலைவர் ராஜேந்திரன் பட்டியல்அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை ஒன்றிய தலைவர்கள் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின்போது அம்பேத்கர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து […]

பொது தகவல்கள்

அட்சய திருதியை நாளில் பல்லியை கண்டால் ஏழேழு ஜென்மத்து பாவம் தீரும்

அட்சய திருதியை அன்று (22.4-2023) உங்கள் வீட்டு மூலை முடுக்குகளில் ஒளிந்திருக்கும் பல்லியை, எப்பாடு பட்டாவது ஒருமுறை பார்த்தால் போதும். ஏழேழு ஜென்மத்து பாவத்தையும் தீர்த்து விடலாம். உங்களுடைய வீட்டில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் உலாவிக் கொண்டிருக்கும் இந்த ஜீவராசி, இன்று காலையிலிருந்து உங்களுடைய கண்களில் பட்டதா? நிச்சயம் உங்களால் இந்த ஜீவ ராசியை, இன்று காலையில் இருந்து தரிசனம் செய்து இருக்க முடியாது. நம் வீட்டில் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டு சத்தம் எழுப்பும், பல்லிக்கும், அக்சய […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி; களை கட்டிய கலைநிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவிழா மற்றும் நெய்தல் கலை விழா நேற்று தொடங்கியது. கனிமொழி எம்.பி,தொடங்கி வைத்தார். மே 1-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோவில்பட்டி கி.ரா.நினைவரங்கத்தில் 6 நாட்கள் உள்ளூர் கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்துதல் மற்றும் புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம்  ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். முதல் நாள் விழா நேற்று நடைபெற்றது,. […]

செய்திகள்

கர்நாடகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. போட்டியிட விரும்பியது. இதனை ஏற்க பா.ஜனதா மறுத்து விட்டது. இதையடுத்து, கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும், அங்கு அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, புலிகேசிநகர் தொகுதியில் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று […]

செய்திகள்

நிதி அமைச்சர் கூறிய 100 கோடி ரூபாய் சொத்து குவிப்பு பற்றி மத்தியஅரசு

சென்னை ராயபுரத்தில் நீர் மோர் பந்தலை அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பழவகைகளை கொடுத்தார். தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூறியதாவது:-  தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது .ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலப் பணிகளை அ.தி.மு.க. செய்து வருகிறது  பொய் ஒன்றை மட்டும்  மூலதனமாக வைத்து ஆட்சி நடத்தி வருகிறது தி.மு.க.. […]

செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்பு

கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி தொகுதியில்  அ.தி.மு.க. வேட்பாளராக  அன்பரசன் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அன்பரசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 வது புத்தககண்காட்சி  இன்று தொடங்கி மே 1 ம் தேதி வரை நடைபெற உள்ளது தூத்துக்குடியில் எட்டயபுரம் சங்கர பேரி பிரதான சாலை அருகே நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். பாராளுமன்ற தி.மு.க. குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.. பின்னர்  அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை […]

செய்திகள்

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பேசும்போது நேரலை துண்டிக்கப்படுகிறது; எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- “ சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை நிலைநாட்டவில்லை. தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்தும் எதிர்க்கட்சி துணை தலைவர் […]

கோவில்பட்டி

 10 அம்ச கோரிக்கைகள்: அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஓய்வூதியர் சங்கத்தினர் கொவில்பட்டி தலைமை அஞ்சல் நிலைய வாசலில் இன்று காலை தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் கோட்ட தலைவர் சுப்புராஜ், செயலாளர் தவமணி, நிதி செயலளார் தர்மராஜன் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தை சேர்ந்த அருள்ராஜன்,தங்கராஜ், பாலசுப்பிரமணியன் உள்பட பலரும் கலந்து கொண்டனர், போராட்ட குழுவினர் வலியுறுத்திய 10 அம்ச கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

கோவில்பட்டி

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்  சுரேஷ் தலைமை தாங்கினார். நேதாஜி பாலமுருகன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.சாமி நகர துணை செயலாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி மதிமுத்து, மற்றும்  தீப்பெட்டி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜாவிடம்  மனு அளிக்கப்பட்டது. அந்த […]