• May 20, 2024

Month: April 2023

செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 கோடியை எட்டும்; டி.ஜெயக்குமார் கணிப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி புதிய உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் விண்ணப்ப படிவங்களை பெற்றுகொண்டார். பின்னர் அதிமுக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- இன்று இருபெரும் நிகழ்ச்சிகள். முதல் நிகழ்ச்சியாக சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட   அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் […]

கோவில்பட்டி

முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார்-பத்திரகாளி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ; பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் தாலுகா  முப்பிலிவெட்டி கண்மாய்க் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா இன்று 5ந் தேதி தொடங்கியது. காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. காலை 10 மணிக்கு பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மதியம் […]

கோவில்பட்டி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தேரோட்டம்

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல், விளா, காலசந்தி ஆகிய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகப் […]

கோவில்பட்டி

தே.மு.தி.க.சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது,இதில் தர்ப்பூசணி பழம்,நீர் மோர்   பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமை தாங்கி  தண்ணீர்ப்பந்தலை  திறந்து வைத்தார், நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுகுழு உறுப்பினர் எல்லப்பன் ரெங்கசாமி, கோவில்பட்டி மேற்கு ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி  பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவில்பட்டி செண்பகவல்லி உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா,, மிக முக்கியமான திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது,. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று  5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது, தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.\ ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய அம்சமாக தேரோட்டம், 13-ந்தேதியும், தீர்த்தவாரி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி  பங்குனி உத்திர திருவிழா; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள்

கோவில்பட்டி செண்பகவல்லி உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா, இந்த ஊர் மக்களின் மிக முக்கியமான திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது,. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை 5-ந்தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய அம்சமாக தேரோட்டம், 13-ந்தேதியும், தீர்த்தவாரி 14-ந்தேதியும், தெப்ப திருவிழா 15-ந்த்தேதியும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா , மக்களுக்கு பக்தி மட்டுமின்றி பொழுதுபோக்கு நாட்களாகவும் இருக்கும்.அந்த […]

செய்திகள்

கொரோனா : அலட்சியமாக இருக்க கூடாது- அமைச்சர்  மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 90 சதவீதம் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரிய அளவில் பதற்றமோ […]

கோவில்பட்டி

மஹாவீர் ஜெயந்தி:இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் 2622வது மஹாவீர் ஜெயந்தி விழா செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு கொண்டாடப்பட்டது ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனர் தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார், கழுகுமலை 1008மஹாவீரர் அதிசய ஷேத்திர கமிட்டி செயலாளர்  முகேஷ் ஜெயின் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மஹாவீரின் போதனைகளான கொல்லாமை,உண்மையே பேசு,திருடாதே, போன்ற போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.சி.எஸ்.டி ஆலோசனை குழு உறுப்பினர் விஜயன்,ரித்திக் ஜெயின்,பிரமேஷ் ஜெயின் ஆகியோர்  முன்னிலை வகித்தனர், […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்காக அக்னிச்சட்டி எடுக்க போறேன்- நடிகர் கஞ்சா கருப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முருகன் கோவிலில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு நிருபர்களிடம் கூறியதாவது: மானாமதுரை அருகே உள்ள முருகன் கோவிலில் இன்று பால்குடம் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறேன். இதனை தொடர்ந்து சமயபுரம் முத்துமாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கப்போறேன். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக ஆனதற்கும், அடுத்த முதல் அமைச்சராக ஆவதற்கும் நான் அக்னிசட்டி எடுக்கப்போறேன். கூடிய விரைவில் நேர்மையான நல்லாட்சி நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி வந்திருந்தால், […]

ஆன்மிகம்

நவக்கிரக கோவில்கள் சுற்றுலா ஒரே நாளில் எப்படி செல்வது?

நவக்கிரக கோவில்கள் ஒன்பதும்  கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்யலாம்.*1, திங்களூர் (சந்திரன்):**தரிசனம் நேரம் :1மணி நேரம்**காலை 6மணி* ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்வேண்டியது திங்களூர்தான். நீங்கள்  கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து […]