தூத்துக்குடி மாவட்டட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ் மரபின் வளமையையும்ä, பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகளை மாவட்டம்தோறும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்..அதன்அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் 10.3.2023ம் அன்று கல்லூரி அளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்ää மாநில […]
கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் மினி பஸ்-ஆட்டோ டிரைவர்கள் மோதலை தடுக்க சமாதான கூட்டம்;
கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில்களில் வரும்பயணிகளை ஏற்றி செல்வதில் ஆட்டோ டிரைவர்களுக்கு போட்டியாக மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டனர்,\ மேலும் இது தொடர்பாக மினி-பஸ்-ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு ரெயில்நிலைய ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மினி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டியை சேர்ந்த தமிழேந்திரன் சர்க்கார் (வயது 34) என்பவர் திண்டுக்கல் அரசு கேபிள் பிரிவில் உதவி தொழில்நுட்பாளராக இருந்தார், இவர் இன்று காலை பள்ளிக்கூட ஆசிரியையான மனைவி அஜித்தா(28) மகள் ஜியா (5) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்றார். பொட்டி செட்டிபட்டி பிரிவு அருகே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இடித்து, 1 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து தமிழேந்திரன் சர்க்கார் பலியானார். […]
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானர். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர். = இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.
கோவில்பட்டி இலுப்பையூரணி ஏஞ்சல் நரசரி பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, வேல்ஸ் வித்யாலயா பள்ளி மற்றும் தெற்கு வண்டாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் பல்வேறு தனியார் பள்ளி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்,. கருப்பு பட்டயத்துக்கான தேர்வில் வெற்றி பெற்ற ,மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் வழங்கப்பட்டது. இதற்கான தேர்வுகளை கராத்தே மாஸ்டர் விஜயராகவன் நடத்தினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொவில்பட்ட்டி கிழக்கு […]
கோவில்பட்டியில் கொளுத்தும் வெயில்: இளநீர், தர்பூசணி வியாபாரம் சூடு பிடித்தது; பழரசம், ஜூஸ்,
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை, வெயில், குளிர் என மூன்று சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும். குறிப்பாக வெயில் மிகச்சாதாரணமாக 95 டிகிரியை கடந்து சுட்டெரிக்கும். அதற்கேற்ப இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காண முடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு […]
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் எட்டயபுரம் தாலுகா மேலநம்பிபுரம் கிராம மக்கள் ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் வந்தனர். அவர்கள் திடீரென்று அலுவலக வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்களது மேலநம்பியாபுரம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதையை, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து குடிசை […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது மேலும், அ.தி.மு.க .பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது. தீர்ப்பு வெளியான உடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி […]
பழரசம், சர்பத், ஜூஸ் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்; தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:;- “தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டதால், பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜுஸ், கூல்டிரிங்ஸ், மில்க் ஷேக், மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும், இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால், பாதுகாப்பற்றக் குடிநீரை திரவ ஆகாரங்களின் […]
*தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் வந்தியத்தேவன் (வயது 64). இவர் தனது உறவினருக்கு கிரைய ஆவணம் தொலைந்து விட்டதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று காவல் நிலைய சான்று பெற உதவி செய்ய யாரேனும் உள்ளனரா என விசாரித்தார். .அப்போது தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்ராஜ் (66) என்பவரிடம் அழைத்துச் சென்று அவர்கள் திரவியபுரம் மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (56), சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் […]