கோவில்பட்டியில் கொளுத்தும் வெயில்: இளநீர், தர்பூசணி வியாபாரம் சூடு பிடித்தது; பழரசம், ஜூஸ், சர்பத் விற்பனையும் அமோகம்

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை, வெயில், குளிர் என மூன்று சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும்.
குறிப்பாக வெயில் மிகச்சாதாரணமாக 95 டிகிரியை கடந்து சுட்டெரிக்கும். அதற்கேற்ப இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காண முடிகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்கள்.
கோடை தொடங்குவதற்கு முன்பாகவே 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கோவில்பட்டியில் வெயிலின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் உள்ள மரங்களின் நிழலில், நின்று இளைப்பாரி செல்வதை காண முடிகிறது.
பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை நகரின் ஆங்காங்கே சாலையோரம் வைத்து விற்கப்படுகிறது.. இதனை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்..
வெள்ளரிப்பிஞ்சு வியாபாரி கூறுகையில், “வெள்ளரிபிஞ்சு சாறு உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெள்ளரி பிஞ்சுகளில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் தாகம் எடுக்காது. அதனால் வெயில் காலங்களில் இதை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய வெள்ளரிப் பிஞ்சு விற்பனை நன்றாக இருக்கும்.”என்றார்.

மேலும் நகரின் பல்வேறு முக்கியஇடங்களில் இளநீர் கடைகள் பெருகி உள்ளன. ரூ.20 ரூ25 என்ற அளவில் விற்கப்படுகின்றன, பெரிய அளவிலான இளநீர் ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்பனையாகிறது, இளநீர் கடைகளில் வெயில் சுட்டெரிக்கும் பகல் நேரத்தில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
இதே போல் சர்பத் மற்றும் ஜூஸ் கடைகளிலும் வியாபாரம் சூடு பிடிக்கிறது. திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்களை வியாபாரிகள் கொண்டு வந்து கோவில்பட்டியில் விற்கிறார்கள்/\
சில்லறை மற்றும் மொத்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள் ஒரு கிலோ தர்பூர்சனி ரூ.20 என்ற அளவில் அதிகம விற்பனையாகிறது.. சில கடைகளில் தர்பூசனி பழத்தை வெட்டி அண்டாவில் போட்டு ஐஸ் கலந்து பின்னர் கண்ணாடி கிளாசில் ஊற்றி நன்னாரி சர்பத் கலந்து ரூ.20-க்கு விற்பனை செய்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோடைகால சர்பத், ஜூஸ் கடை நடத்துவோர் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
