• May 20, 2024

கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில்  நாளை தமிழ் கனவு நிகழ்ச்சி; ஆட்சியர் தகவல்

 கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில்  நாளை தமிழ் கனவு நிகழ்ச்சி; ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ் மரபின் வளமையையும்ä, பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மாபெரும் தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகளை மாவட்டம்தோறும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்..
அதன்அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக தூத்துக்குடி புனித மரியன்னை

கல்லூரியில் 10.3.2023ம் அன்று கல்லூரி அளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்ää மாநில திட்டக்குழு துணைத்தலைவர்

.ஜெ.ஜெயரஞ்சன், ஊடகவியலாளர்.மு.குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதில் ஏராளமான கல்லூரி மாணவää மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழ் கனவு  புத்தகக்கண்காட்சில் நான் முதல்வன் திட்டம், அகழாய்வு களங்கள் உயர்கல்வி வழிகாட்டுதல்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், தாட்கோ திட்டங்கள், வங்கி கடன், தொழில் முனைவோர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட தொழில்மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்கு பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி ஆகிய இரண்டு வகையான விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவுக்கு பின்னர் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கேள்வி நாயகன் மற்றும் கேள்வி நாயகி ஆகிய இரண்டு விருதுகளும் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நாளை (31.3.2023) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 800 மாணவ மாணவியர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும்ää ‘கலைவாணர் என்.எஸ்.கே. நகைச்சுவையில் சமூக நீதி” என்ற தலைப்பில் அருணன்,

‘உயிர்களின் தமிழ்”; என்ற தலைப்பில் அறிவுமதி ஆகியோர்

உரையாற்றுகிறார்கள். எனவே இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவää மாணவிகள் அதிகளவில் பங்கேற்றுää தமிழ் மரபின் வளமையையும்ää பண்பாட்டின் செழுமையையும்

அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *