எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா கோரிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது
மேலும், அ.தி.மு.க .பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது.
தீர்ப்பு வெளியான உடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது எடப்பாடி பழனிசாமியும் , ஓ.பன்னீர் செல்வமும் அருகருகே அமர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்று வந்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை அதி..மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி இன்று சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகருடன் அ.தி.மு.க. கொறடா ஆலோசனை மேற்கொண்டார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கக்கூடாது என்று அ.தி.மு.க. கொறடா, சபாநாயரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
