• May 9, 2024

Month: February 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சீமான் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முயன்புரம் வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில் இன்று பகலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறும பொம்மை எரிப்பு போராட்டத்ததை தமிழ்புலிகள் கட்சியினர் நடத்தினார்கள். தமிழ் இனத்தின் பூர்வீக அருந்ததியர் மக்களை வந்தேரிகள் என்று சொல்லி இனவெறியை தூண்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதகாக சீமான் மீது குற்றம் சாட்டி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்  என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்புலிகள் கட்சி மாவட்ட […]

செய்திகள்

அ.தி.மு.க.வுக்கும் ஓ.பி.எஸ்.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது –

ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து கூறியதாவது:- * முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கள்:- சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அதிமுக பீடுநடை போடும் –   முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி:- * எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தர்மம் […]

செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும் -எடப்பாடி பழனிசாமி

மதுரையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற அற்புதமான திர்ப்பு கிடைத்துள்ளது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார்; இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை. இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் ரத்ததான முகாம்

கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் ஜே.சி.ஐ. இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது.. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கே. பி. எம். மகேஷ் முன்னிலை வகித்தார். வரலாற்று துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ், ஜே.சி.ஐ. தலைவர் தீபன் ராஜ், செயலாளர் சூர்யா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், […]

தூத்துக்குடி

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்து 100-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நெல்லை – திருச்செந்தூர் இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டு 1923 -ம் ஆண்டு பிப்ரவரி 23-ந் முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. திருச்செந்தூர் ரெயிலை பொறுத்தவரை 1904 ஆம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு இப்பாதைக்கு நாள் வேலை செய்து பூமி பூஜைகள் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.2.1923 ம் தேதி, சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை திறக்கப்பட்டது.  கடந்த 1923 ஆம் ஆண்டு இதே […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது செல்லும்; சுப்ரீம்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11 ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.  இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஐகோர்ட்டில் அமர்வில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகாய் பயிர் உயர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும்  கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமணப் பயிர்கள் வளர்ச்சி இயக்குநரகம் – இணைந்து விவசாயிகளுக்கான “மிளகாய் பயிர் உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள்” பற்றிய பயிற்சியை நடத்தின. கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 22.2.2023 அன்று இந்த  பயிற்சி முகாம் நடந்தது.. இப்பயிற்சியில் பிச்சைத்தலைவன்பட்டி, தர்மத்துப்பட்டி, .விளாத்திகுளம்,  வடக்குப்பட்டி, சாத்தூர் மற்றும் நாpக்குடி விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர்  மற்றும் தலைவர் கோ. பாஸ்கர் தலைமை  தாங்கி பேசினார். மேலும அவர் […]

செய்திகள்

தி.மு.க.வினர் தேர்தலுக்காக பணத்தை வாரி  இரைக்கிறார்கள், மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு வரவேற்பு;

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. அதிமுக வேட்பாளருக்கு  ஆதரவாக கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னால அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு பகுதிக்கும் அவர் நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு போடும் படி கேட்டுகொண்டார், எல்லா இடங்களிலும் அவருக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர்/ எங்கள் ஒட்டு இரட்டை இலைக்கே என்று உறுதி அளித்தனர். பிரசாரத்தின் இடையே  செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்: வக்கீல் வெட்டிக்கொலை

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு என்பவரது மகன் முத்துக்குமார் (வயது 43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3  மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இவர்கள் பிடியில் சிக்கி தப்பிக்க முடியாமல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடுகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  பேரிடர் மேலாண்மை  முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர்,   ஆய்வு மேற்கொண்டார். [தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சார்பில், பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மீட்புக் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை எஸ்.கே.பிரபாகர் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்  அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் […]