தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடவாமல் தடுக்கவும் கூடுதலாக 21 இருசக்கர வாகன ரோந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகன ரோந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்றும் பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் காவல்துறையின் […]
உலகக்கோப்பை ஆக்கிப்போட்டி தொடங்க உள்ளதை யொட்டி கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில், வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விழிப்புணர்வு ஆக்கிப்போட்டி நடத்தப்பட்டது. இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் திட்டங்குளம் அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 40 வயதிற்கு மேல் மூத்தோர் ஆக்கிப் […]
அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் நெல்லை – திருச்செந்தூர் அகல ரெயில் பாதையை இரட்டைப்பாதையாக மாற்றுதல் மற்றும் மின்மயமாக்கல் ஆகிய பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கின. அந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், முன்னோட்டமாக சிறப்பு ரெயில் பயணம் மூலம் தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, நிறைவடைந்த மின் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பணிக்கான சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து […]
கோவில்பட்டியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லுரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வளைந்து நெளிந்து ஸ்டைல் காட்டி ஓட்டும் நாகரீகம் வளர்ந்து வருகிறது இது போல் வாகனம் ஓட்டினால் மற்றவர்கள் கவனம் முக்கியாமாக மாணவிகள் பார்வை நம் மீது திரும்பும் அதுதான் கெத்து என்று முட்டாள்தனமாக மனதில் நினைத்து கொண்டு செயல்படுகிறார்கள்/ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்று வாங்கி கொடுக்கும் இருசக்கர வாகங்களை அவர்கள் சரிவர பயன்படுத்தாமல் விதிமீறலில் ஈடுபடுகிறார்கள். காலை மற்றும் […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல்: ஏ.பி.கே பழனிச்செல்வம் அணி வேட்பாளர்கள் தீவிர
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை மணி வரை நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர் இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது, இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து டி.கே.டி.திலகரத்தினம்,எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுகிறார்கள்.நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையிலான அணிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரைச் சேர்ந்தவர் ரவீந்தர் ரெட்டி மத்திய அரசின் கெயில் நிறுவனத்தில் கெமிக்கல் அனலிஸ்ட் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் உடல் வலிமை பேண வேண்டும், மன அழுத்தத்தை போக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், விளையாட்டுத்துறையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது விழிப்புணர்வு பாரத யாத்திரை சைக்கிள் பயணத்தை கடந்த மாதம் 29ந் தேதி ஸ்ரீ நகரில் இருந்து தொடங்கியுள்ளார். அரியானா, பஞ்சாப், […]
கோவில்பட்டி புறநகர் பகுதியில் இன்று மாலை பஸ் -கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். முதலில் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை.3 பேர் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை க்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர்கள் பற்றிய முழு விவரம் தெரிய வத்தது. இது பற்றிய விவரம் வருமாறு :-கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக்(22). இவர் விருதுநகர் மாவட்டத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் புறநகர் பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், கோவில்பட்டி நோக்கி வந்த ஒரு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.இந்த விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி நொறுங்கியது. பஸ்சும் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த 3 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் தப்பினார். உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு […]
இயற்கையும் , இன்சூரன்சும் கைவிட்டுவிட்டது- திசைமாறி பயணிக்கும் விவசாயிகள்: மக்காச்சோள பயிர்களை அரைத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு புரட்டாசி ராபி பருவத்தையொட்டி உளுந்து, பாசி,கம்பு, மக்கா, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி பருத்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர், ஆவணி மாத இறுதியில் பயிரிடப்பட்டு ஐப்பசி மாதம் பத்தாம் தேதி வரை மழை பருவத்திற்கு பெய்யாததால் அனைத்து பயிர்களும் பெயரளவில் வளர்ந்தது. இதனால் போதிய வளர்ச்சி இன்றியும் தெம்பின்றியும் பயிர்கள் காணப்படுகின்றன. இதனால் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் கடும் பாதிப்புக்குள்ளாகின. மேலும் எந்தாண்டும் இல்லாத வகையில் பயிர்களை […]
உலக கோப்பை கால்பந்துப் போட்டி நேற்று நடைபெற்றது. பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டிக்கு முன்பாகவே கருத்து கணிப்புகள் வெளியாகின. தமிழ்கா முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அர்ஜென்டினா அணி வெல்லும் என்று கருத்து கூறி இருந்தார். நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலககோப்பையை கைப்பற்றியது, விறுவிறுப்புடன் நடைபெற்ற இறுதி போட்டியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் கண்டுகளித்தார்.. அர்ஜென்டினா அணியின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியை நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டார், […]