நான் கணித்ததுபடியே உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி; டி.ஜெயக்குமார் மகிழ்ச்சி
![நான் கணித்ததுபடியே உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி; டி.ஜெயக்குமார் மகிழ்ச்சி](https://tn96news.com/wp-content/uploads/2022/12/cf02df0f-82b7-491b-a34c-e7d83eaf4c48.jpg)
உலக கோப்பை கால்பந்துப் போட்டி நேற்று நடைபெற்றது. பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டிக்கு முன்பாகவே கருத்து கணிப்புகள் வெளியாகின.
தமிழ்கா முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அர்ஜென்டினா அணி வெல்லும் என்று கருத்து கூறி இருந்தார். நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலககோப்பையை கைப்பற்றியது,
விறுவிறுப்புடன் நடைபெற்ற இறுதி போட்டியை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் கண்டுகளித்தார்.. அர்ஜென்டினா அணியின் வெற்றியை தொடர்ந்து மகிழ்ச்சியை நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டார்,
இது பற்றி டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணியே பிபா உலககோப்பை கால்பந்து போட்டியை கைப்பற்றும் என ஏற்கனவே கணித்திருந்தேன். நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி எளிதில் கிடைப்பது வெற்றியல்ல.போராடி கிடைப்பதே வெற்றி., போராடி வெற்றி கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு டி,.ஜெயக்குமார் கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)