கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல்: ஆலோசனை கூட்டத்தில் பி.ஏ.கே.பழனிச்செல்வம் அணி வேட்பாளர்கள் அறிமுகம்
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர் இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது, இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுகிறார்கள்.
நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையிலான அணிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த அணியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது,.காலை 10 மணியில் இருந்தே ஆதரவாளர்கள் வரத்தொடங்கினர்,. அரங்கத்தின் வெளியே இரண்டு யானை உருவ பிரமாண்ட பலூன் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன,.
கூட்டம் தொடங்கியதும் சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம். துணை தலைவர் எம்,.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் , நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளரும், நகரசபை துணை தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக எம்.எஸ்,எம்,ஆர்,ராஜசேகர், என்,ராஜவேல் ஆகியோர் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர்,
இதை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பேசியவர்கள் விவரம் வருமாறு:-
செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன்:- நமது தலைவர் சங்க வளர்ச்சிக்கு அரும்பணிகளை செய்து இருக்கிறார். தன்னைப்பற்றி பெருமை பேசுவதை விரும்பாதவர்,. சங்க தேர்தலை நடத்த விடாமல் இடையூறு செய்பவர்களை நாங்கள் விலக்கவில்லை. அவர்கள் விலகி இருக்கிறார்கள். இந்த தேர்தலில் யானை சின்னத்துக்கு அனைவரும் வாக்களித்து பழனிசெல்வம் அணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
சட்ட ஆலோசகர் வக்கீல் ஏ.செல்வம்:- சங்கத்துக்கு இடையூறாக செயல்பட்ட 22 உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் மாற்று கட்சியினருடன் சேர்ந்து சங்கத்தை நடத்தவிடாமல் அவதூறு பேசி வருகிறார்கள்.2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்த வேண்டும். அன்று முதல் தொடர்ந்து இடையூறு செய்கிறாகள். ஒரு வழியாக சென்னை ஐகோர்ட்டு மூலம் தேர்தல் நடத்த அனுமதி பெற்று 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. எனவே சங்க வளர்ச்சிக்கு பாடுபடும் பி.ஏ.கே.பழனிச்செல்வம் தலமையிலான அணியினர் 65 பேருக்கும் யானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
துணை தலைவர் எம்,.செல்வராஜ்:- தலைவர் பழனிசெல்வம் சங்கத்துக்கு எவ்வளவோ நம்மைகளை செய்து இருக்கிறார். தொடர்ந்து அவர் பணியாற்றும்வகையில் அவருக்கு நாம் அனைவரும் துணை நிற்கவேண்டும்.
பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார்:- சங்கத்தில் முறைகேடு நடந்துவிட்டதாக சிலர் பேசிவருகிறார்கள். அதுபோல் எந்த தவறும் நடக்கவில்லை. சங்க கணக்கு திறந்த புத்தகமாக இருக்கிறது,.யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் என்னை வந்து சந்திக்கலாம், விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம்.
நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் -நகராட்சி துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ்:- நான் தலைவரிடம் நிர்வாக குழுவை கூட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளை அறிவித்து விடலாம் என்றேன், ஆனால் அவர் கண்டிப்பாக தேர்தல் நடத்தவேண்டும். அதன் மூலம் வெற்றி பெற வேண்டும் என்று கூறி இன்று தேர்தலை சந்திக்கிறோம். அடுத்த தேர்தலுக்கு எதிர் அணி இருக்காது,.நான் என்றும் பழனிசெல்வம் அணியில்தான் இருப்பேன், எந்த சமயத்திலும் அணி மாறமாட்டேன்,
எம்.எஸ்,எம்,ஆர்,ராஜசேகர்:- சங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்களை இந்த தேர்தலுடன் காணாமல் போய்விட செய்ய வேண்டும்.அதற்கு அனைவரும் யானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
என்.ராஜவேல்:- தலைவர் பழனிசெல்வம் தலைமையிலான அணியினர் வெற்றிக்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படவேம்ண்டும்.
பி.ஏ.கே.பழனிசெல்வம்
இறுதியில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பி.ஏ.கே.பழனிசெல்வம் பேசினார். அவர் பேசுகையில், “சங்கத்தை நடத்த விடாமல் செய்பவர்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கிறார்கள் கொரோனா சமயத்தில் நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இறந்து போனார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உதவி செய்யக்கூட விடாமல் செய்து இருக்கிறார்கள்.இதைநினைக்கும் போது பெரிதும் வேதனையாக இருக்கிறது. “ என்று குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.கே.பழனிச்செல்வம் அணி வேட்பாளர்கள் ஜே.காசிராஜா, கே,பாஸ்கர், , தேவி பிரேம்ஸ் சண்முகசுந்தரம்,ராகவேந்திரா அறக்கட்டளை சீனிவாசன் உள்ளிட்ட அனைவரையும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கைகோர்த்து மேலே உயர்த்தியபடி வெற்றி நமதே என்று முழக்கமிட்டனர்,
கூட்டத்தில் ரைட்வே குளோபல் மார்க்கெட்டிங் ஜி.சண்முகராஜா, ஆரா செல்டர்ஸ் .ஜி,.ஜேசு மணி , எஸ்.ஆர்.எம்.கே.ராஜேந்திர பிரசாத், வக்கீல் ஜே.ரத்தினராஜா, எஸ்.கே.டி.எஸ்,.பிருதிவிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை ஜி.ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். முடிவில் நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கே.கண்ணன் நன்றி கூறினார், தொடர்ந்து தேசியகீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது,
-S.K.T.S.திருப்பதிராஜன்-