கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல்: ஏ.பி.கே பழனிச்செல்வம் அணி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை மணி வரை நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர் இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது,
இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து டி.கே.டி.திலகரத்தினம்,எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுகிறார்கள்.
நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையிலான அணிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது..
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பழனிசெல்வம் அணி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அன்றையை தினம் அவரது தலைமையில் போட்டியிடும் நிர்வாககுழு உறுப்பினர் வேட்பாளர்கள் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்,
தொடர்ந்து மறுநாள் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்,. முதல் நாள் பத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அந்த பகுதியில் குடியிருக்கும் உறுப்பினர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று யானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்,’
அதே போல் இன்று காலை கடலையூர் ரோட்டில் பங்களா தெரு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் உறுப்பினர்கள் வீடுகளுக்கு குழுவாக சென்று வாக்கு சேகரித்தனர்..இன்று மாலையும் தொடர்ந்து வாக்கு சேகரிப்பு நடக்கிறது.
இன்றைய வாக்கு சேகரிப்பில் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், பொருளாளர் டி.,ஆர்,சுரேஷ்குமார் மற்றும் எஸ்.ஆர்.எம்.கே.ராஜேந்திரபிரசாத், வக்கீல் ஏ.செல்வம், எஸ்.கண்ணன் டி.வி.எல்.எஸ்.உரிமையாளர் எல்.ரத்தினகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,