Month: December 2022

கோவில்பட்டி

அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் கூட்டு கன்னி பூஜை

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள தங்கமஹால் மண்டபத்தில் ஓம் ஸ்ரீ நிறைவுள்ளம் அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் கூட்டு கன்னி பூஜை நடைபெற்றது, இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ நிறைவுள்ளம் அய்யப்ப பக்தர் குழு நண்பர்கள் செய்திருந்தனர்

செய்திகள்

ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; டி.ஜெயக்குமார் பேட்டி

எம்ஜிஆர் நினைவிடத்தில் அ. தி. மு. க. வினர் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.இந்த அஞ்சலி நிகழ்ச்சி யில் பங்கேற்ற அ. தி. மு. க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :- அரசியல் வானிலும், பொது வாழ்க்கையிலும் உலகத்தில் உச்சபட்சமாகத் துருவ நட்சத்திரத்தை தொட்டு இன்றைக்கு உலகளாவிய புகழ் பெற்றிருக்கின்ற,மறைந்தாலும் இன்றும் உலகம் முழுவதும் வாழ்கின்ற ,தமிழ் மக்களின் அத்தனை நெஞ்சங்களிலும் வாழ்ந்து […]

கோவில்பட்டி

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாற்று திறனாளிகளுக்கு புத்தாடைகள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் மாற்றுதிறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமை தாங்கினார், பஞ்சாயத்து தலைவி கவிதா அன்புராஜ், மாவட்ட ஜிஎஸ்டி கவுன்சிலிங் குழு உறுப்பினர் விஜயன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நலத்திட்டங்களை சமத்துவ […]

தூத்துக்குடி

தமிழக விமான நிலையங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருந்து கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆராய்ந்தார். மேலும் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா […]

பொது தகவல்கள்

இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள்

இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள் பற்றிய பட்டியல் இது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ‘விசா’ வேண்டும். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அங்கீகரிக்கும் ஆவணமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். உள் நாட்டிற்குள் உலவுவதற்கு இத்தகைய ஆவண கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும் ஒருசில இடங்களுக்குள் நுழைவதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலும் அப்படிப்பட்ட இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர்களாகவே இருந்தாலும் ஐ.எல்.பி எனப்படும் ‘இன்னர் லைன் பெர்மிட்’ பெற்றிருக்க வேண்டும். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை: 3 பேர் சிக்கினர்

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மந்தித்தோப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகில் 2 மோட்டார் சைக்கிளுடன் 5 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் மோட்டார் ைசக்கிளுடன் தப்பிஓட முயற்சித்தனர். போலீசார் சுற்றிவளைத்து  3 பேரை பிடித்தனர். […]

தூத்துக்குடி

பா.ஜனதா.-தி.மு.க.மோதல் முற்றுகிறது; தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

கோவில்பட்டியில் சில நாட்களுக்கு முன்பு  நடந்த பா.ஜனதா மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சத்துணவில் அழுகிய முட்டை போடப்படுகிறது. முட்டை வாங்குவதில் அமைச்சர் கமிஷன் வாங்குகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் மீது குற்றம் சாட்டினார். மேலும் அழுகிய முட்டை அமைச்சர் கீதாஜீவன் என்றும் குறிப்பிட்டார். இது பற்றி செய்தியாளர்கள் அமைச்சர் கீதா ஜீவனிடம்  கேட்டபோது அவர், ’’பாஜகவினர் குறிப்பிடும் முட்டைகள் அனைத்தும் கெட்டுப்போய் இருந்ததால்  மாற்றுவதற்காக தனியாக எடுத்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மகாதேவர் ஆலயத்தில் ஆத்ம சங்கமம் திருவிழா; 29-ந் தேதி சித்தகிரி

கோவில்பட்டியில் இருந்து 9.2 கிலோமீட்டர் தொலைவில் கிராமத்து சூழலில் கேரள கட்டிடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணிக்கும் கணபதிபட்டிக்கும் இடையே உள்ள சாய் அமர்நகர் டவுண்ஷிப் பகுதியில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மகாதேவர், சிவபெருமானாக காட்சி அளிக்கிறார். பிரதான சன்னதியில் சிவலிங்கம் வழிபாடு நடத்தப்படுகிறது. பின்புற சன்னதியில் பார்வதி தேவி அருள்பாலிக்கிறார். பக்கவாட்டில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கோவில் உள் மண்டபத்தில் சுவாமி ஐயப்பன் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜை […]

செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன. அதாவது பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் பொருளாதார வகுப்பில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.12 ஆயிரமும், கோவாவுக்கு ரூ.15 ஆயிரத்து 700-ம், மங்களூருவுக்கு ரூ.11 ஆயிரத்து 200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சாதாரண நாட்களை விட தற்போது விமான கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். மற்ற நாட்களில் பெங்களூருவில் இருந்து […]

செய்திகள்

கர்நாடகத்தில் முககவசம் மீண்டும் கட்டாயம்; கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் […]