சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாற்று திறனாளிகளுக்கு புத்தாடைகள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் மாற்றுதிறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமை தாங்கினார், பஞ்சாயத்து தலைவி கவிதா அன்புராஜ், மாவட்ட ஜிஎஸ்டி கவுன்சிலிங் குழு உறுப்பினர் விஜயன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நலத்திட்டங்களை சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் வழங்கினார்,
இந்த நிகழ்ச்சி யில் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அழகு, கிளைச் செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.