பா.ஜனதா.-தி.மு.க.மோதல் முற்றுகிறது; தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

 பா.ஜனதா.-தி.மு.க.மோதல் முற்றுகிறது; தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

கோவில்பட்டியில் சில நாட்களுக்கு முன்பு  நடந்த பா.ஜனதா மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சத்துணவில் அழுகிய முட்டை போடப்படுகிறது. முட்டை வாங்குவதில் அமைச்சர் கமிஷன் வாங்குகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் மீது குற்றம் சாட்டினார். மேலும் அழுகிய முட்டை அமைச்சர் கீதாஜீவன் என்றும் குறிப்பிட்டார்.

இது பற்றி செய்தியாளர்கள் அமைச்சர் கீதா ஜீவனிடம்  கேட்டபோது அவர், ’’பாஜகவினர் குறிப்பிடும் முட்டைகள் அனைத்தும் கெட்டுப்போய் இருந்ததால்  மாற்றுவதற்காக தனியாக எடுத்து வைத்தது. அதனை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு பாஜகவினர் இப்படி குற்றம் சாட்டி வருகின்றனர் என்று பதில் அளித்தார்.

 அதன் பிறகு கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், எழுப்பப்படும் புகார் குறித்தும், பாஜக அரசியல் குறித்தும் பேசிவிட்டு எங்க ஊரில் அண்ணாமலை மேடையேறி பேச முடியாது என்று மிரட்டும் தோரணையில் பேச விவகாரம் பெரிதாகி விட்டது/

இரண்டு நாட்களுக்கு முன்பு  தூத்துக்குடியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத்தலைவருமான சசிகலாபுஷ்பா பேசும்போது, எங்க தலைவரை மேடையேற முடியாது என்று அமைச்சர் கீதாஜீவன் எப்படி சொல்லலாம்?. நாங்க நினைச்சா உங்களை வீட்டை விட்டு வெளியில் வரமுடியாதபடி காலை வெட்டிவிடுவோம் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியதால் பிரச்சினை மீண்டும் வெடித்தது.

நேற்று (22.12.2022) குமரிமாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சசிகலபுஷ்பா சென்றிருந்த ம்=நிலையில்  அவரது வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தி வீட்டை சேதப்படுத்தினர். தகவல் அறிந்து அங்கு பாஜகவினர் திரண்டனர். சம்பவம் குறித்து பாஜக பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி சிப்காட் போலீசில் புகார்

அளித்தார். குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி 3வது மைல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் தயார் ஆனார்கள்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது இரவுக்குள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். அதனால் கலைந்து சென்ற பாஜகவினர், காலைக்குள் சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வில்லை என்றால் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சசிகலாபுஷ்பா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று திமுக கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், டூவிரத்தை சேர்ந்த இசக்கிராஜா மற்றும் 9 பெண்கள் உள்பட 13 பேர் மீது 5 பிரிவின் கீழ் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்தார். அதேபோல் அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று சசிகலாபுஷ்பா மீது தூத்துக்குடி வடபாகம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 13 பேர்களை உடனே கைது செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தெரிவித்த பாஜகவினர், நூற்றுக்கணக்கில் திரண்டு அமைச்சர் கீதாஜீவன் வீடு நோக்கி நடந்து சென்றனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ம்சுன்னதாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்

போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் வீடு நோக்கி சென்றவர்களை தடுத்த்தார். அப்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *