• May 17, 2025

கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை: 3 பேர் சிக்கினர்

 கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை: 3 பேர் சிக்கினர்

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மந்தித்தோப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டின் அருகில் 2 மோட்டார் சைக்கிளுடன் 5 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் மோட்டார் ைசக்கிளுடன் தப்பிஓட முயற்சித்தனர். போலீசார் சுற்றிவளைத்து  3 பேரை பிடித்தனர். 2 பேர் இருளில் தப்பிவிட்டனர்.

அவர்கள் வைத்திருந்த 2மோட்டார் சைக்கிள்களில் மறைத்து வைத்திருந்த சுமார் 1¼ கிலோ கஞ்சா சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்..

விசாரணையில், கோவில்பட்டி ஸ்ரீராம் நகர் இருளப்பசாமி மகன் பொன் பிரகாஷ் (வயது 26), செக்கடி தெரு மாரியப்பன் மகன் ராகேஷ் சர்மா (26), ராஜீவ்நகர் பாலமுருகன் மகன் விஷ்ணு (26) என்பதும், தப்பி ஓடியவர்கள் அன்னை தெரேசா நகர் அய்யாத் துரை மகன் மகேஷ் குமார் ( 23), ஸ்ரீராம் நகர் ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் ( 29) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்து  கஞ்சா விற்றது தெரியவந்தது,

அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கஞ்சா விற்று வைத்திருந்த ரூ.1 லட்சம்  ஒரு பவுன்தங்க சங்கிலி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்பிரகாஷ், ராகேஷ் சர்மா, விஷ்ணு ஆகிய 3பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *