கோவில்பட்டி அருகே மகாதேவர் ஆலயத்தில் ஆத்ம சங்கமம் திருவிழா; 29-ந் தேதி சித்தகிரி மடாதிபதி அருளுரை வழங்குகிறார்

 கோவில்பட்டி அருகே மகாதேவர் ஆலயத்தில் ஆத்ம சங்கமம் திருவிழா; 29-ந் தேதி சித்தகிரி மடாதிபதி அருளுரை வழங்குகிறார்

கோவில்பட்டியில் இருந்து 9.2 கிலோமீட்டர் தொலைவில் கிராமத்து சூழலில் கேரள கட்டிடக்கலை சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணிக்கும் கணபதிபட்டிக்கும் இடையே உள்ள சாய் அமர்நகர் டவுண்ஷிப் பகுதியில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மகாதேவர், சிவபெருமானாக காட்சி அளிக்கிறார். பிரதான சன்னதியில் சிவலிங்கம் வழிபாடு நடத்தப்படுகிறது. பின்புற சன்னதியில் பார்வதி தேவி அருள்பாலிக்கிறார். பக்கவாட்டில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

கோவில் உள் மண்டபத்தில் சுவாமி ஐயப்பன் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. சீசன் சமயங்களில் இங்கு அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு வெளிப்புற மைதானத்தின் ஒரு பகுதியில் நாகர் மற்றும் இசக்கி அம்மன் சன்னதிகள் உள்ளன, மேலும் ஷீரடி சாய்பாபா தியான மண்டபம் இருக்கிறது,

மகா தேவருக்கு தினமும் ஆறுகால பூஜைகள் நடக்கின்றன. காலை 7 ,மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல்,இரண்டு மற்றும் உச்சிகால பூஜை முடிந்தவுடன் காலை 10 மணிக்கு நடை சாத்தபடுகிறது. பின்னர் மாலை 5.3௦ மணிக்கு நடை திறக்கப்பட்டு 3 பூஜைகள் முடிந்து இரவு 7.3௦ மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

இது தவிர் விசேஷ நாட்களில் பிரதோஷ பூஜை, பவுர்ணமி பூஜை, நாகர் பூஜை நடக்கிறது, ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணிக்கு சாய் பூஜை நடக்கிறது. மேலும் இங்கு ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த கோவில் நிர்வாகியாக  கே.ஆர்.பி.சுரேஷ். இருக்கிறார்.

மகாதேவர் கோவிலின் முன்புற தோற்றம்

மகாதேவர் கோவிலில் மார்கழி சங்கமம் 2022 நடைபெற இருக்கிறது. வருகிற 29-ந் தேதி நவீன யுகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணை புரியும் பண்டைய காலம் வழிகாட்டும் சிறந்த வாழ்வியல் முறைக்கு திரும்புதல், தீய எண்ணங்கள் மற்றும் தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்து  இயற்கை வழங்கியுள்ள பஞ்சபூத கொடைகளின் உதவியுடன் இன்றைய பரபரப்பான வாழ்வில் ஏற்றம் பெற ஆத்ம சங்கமம் நிகழ்ச்சி நடத்த்ப்படுகிறது.

இதையொட்டி அன்று காலை முதல் மாலை வரை நிகோவிலில் பல்வேறு நிகழச்சிகள் நடைபெறுகின்றன, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. 9 மணிமுதல் மரபு வலவழி வைத்தியம் நடைபெறுகிறது. தலை மற்றும் வயிறு சம்பந்உபாதைகள், வெரிகோஸ், முதுகு மற்றும் தண்டுவடம் சிகிச்சை,நீரிழிவு, சொரியாசிஸ் மற்றும் குடல் மருத்துவம் ஆகியவற்றுக்கு டாக்டர்கள் குஞ்சிராமன், பிரகாசன், அச்சப்பன், பாலன் ஆகியோர் சிகிச்சை அளிக்கிறார்கள்.

பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்றைய தினம் மராட்டிய மாநிலம் கோலாபூர் அருகே கனேரி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சித்தகிரி மடத்தின் 49-வது மடாதிபதி அத்ரிஷ்ய காட்சித் சித்தேஸ்வர் சுவாமிஜி அருளுரை வழங்குகிறார்,. விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் கார் மூலமாக மகாதேவர் ஆலயம் வருகிறார். அவருக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல்  7 மணி வரை அவர் அருளுரை வழங்குவார்.

இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு இலவச போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல்களை கோவில் நிர்வாகி கே.ஆர்.பி,.சுரேஷ் தெரிவித்து உள்ளார். மேலும் தகவல்களுக்கு 9444024979 என்ற அலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும்  கூறி இருக்கிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *