சென்னை சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் ஒரு வாகனத்தில் மூட்டையில் இறைச்சி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 100 கிலோ அளவில் மாட்டிறைச்சி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கால்நடைத்துறை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு […]
கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை வந்து சென்று கொண்டிருந்த பஸ்சை வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் […]
பஸ் பயணங்களில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் புறக்கணிக்கப்படுவதாக போக்குவரத்து துறையிடம் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். பொதுமக்களின் புகாரகளை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய […]
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை; தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு வக்கீல்களுடனான மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் […]
தூத்துக்குடியில் புயல், மழை எச்சரிக்கை காரணமாக கடந்த 12 நாட்களுக்கு பின்னர் விசைப் படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு படகு உரிமையாளர் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 250 படகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
நெல்லை அருகே நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் கடந்த 21-ந்தேதி இரவு பேட்டை சிப்காட்அருகில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து , கோடகநல்லூர் பாலச்சந்தர் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில்இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான நடுக்கல்லூர் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த கெங்காபாண்டியன் மகன் சுந்தரபாண்டியன்(30) […]
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கவர்னர் மாளிகையில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது , முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவரணி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில […]
கோவில்பட்டி வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை தொடங்கப்பட இருக்கிறது, இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ம.தி,மு.க.தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கோவில்பட்டி தாலுகா வில்லிசேரி கிராமத்தில் 4,500 பேர் வசிக்கிறார்கள். சுற்றுப்புற கிராமங்களிலும் சேர்த்து 20 ஆயிரம் பேர் வரை இருக்கிரார்கள். இங்குள்ளவர்களின் மகன்கள் அதிகம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அங்கிருந்து பெற்றோர்களுக்கு வங்கி மூலம் பணம் அனுப்புகிறார்கள். அதை எடுக்க இங்கிருந்து கோவில்பட்டிக்கு செல்லவேண்டி […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் உருளைகுடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் பயன்பாட்டில் இருந்து வந்த இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்றி கோவில் பயன்பாட்டுக்கு வழங்க கோரி ஊர் மக்கள் மற்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அகில பாரத இந்து மகாசபா மாநில துணை தலைவர் புருசோத்தமன், மாவட்ட […]