கோவில்பட்டி வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை தொடங்கப்படுகிறது- துரை வைகோ தகவல்
கோவில்பட்டி வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை தொடங்கப்பட இருக்கிறது, இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ம.தி,மு.க.தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில்பட்டி தாலுகா வில்லிசேரி கிராமத்தில் 4,500 பேர் வசிக்கிறார்கள். சுற்றுப்புற கிராமங்களிலும் சேர்த்து 20 ஆயிரம் பேர் வரை இருக்கிரார்கள். இங்குள்ளவர்களின் மகன்கள் அதிகம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள்.
அங்கிருந்து பெற்றோர்களுக்கு வங்கி மூலம் பணம் அனுப்புகிறார்கள். அதை எடுக்க இங்கிருந்து கோவில்பட்டிக்கு செல்லவேண்டி இருக்கிறது. பல மைல் தூரம் சென்று திரும்ப வயாதனவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே வில்லிசேரி கிரமாத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வைகோவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்தியமந்திரி நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் வில்லிசேரியில் இந்தியன் வங்கி கிளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக சொன்னார்கள். எனவே இதனை பார்வையிட வந்தேன். வங்கி அதிகாரிகளையும் சந்தித்து பேசினேன். இந்த கிராமத்தில் வங்கி அமைவதற்கு இங்குள்ள வயதானவர்களும், இளைஞர்களும் தான் காரணம்,
இவ்வாறு துரை வைகோ கூறினார்.