கோவில் இடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் உருளைகுடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் கோவில் பயன்பாட்டில் இருந்து வந்த இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்.
தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்றி கோவில் பயன்பாட்டுக்கு வழங்க கோரி ஊர் மக்கள் மற்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் அகில பாரத இந்து மகாசபா மாநில துணை தலைவர் புருசோத்தமன், மாவட்ட தலைவர் சங்கராஜா, பொதுசெயலாளர் ஆரோக்கியம், பொருளாளர் பழனிசாமி, செயலாளர்கள் முத்து, முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.]
சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.