பா.ஜ.க.வை புறக்கணிக்க வேண்டும்; மீனவர் தின கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேச்சு

 பா.ஜ.க.வை புறக்கணிக்க வேண்டும்; மீனவர் தின கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேச்சு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவரணி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கி 800 பேருக்கு ரூ. 4 லட்சம் மதிப்பீல் தையல் மிஷின், சேலை, மீனவர்களுக்கான அலுமினிய அண்டா ஆகியவற்றை கனிமொழி எம்.பி, வழங்கினார்.
நிகழச்சியில் கனிமொழி பேசியதாவது:-
மீனவர்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும், திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தி.மு.க.வும் மீனவர்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்கும். தொடர்ந்து மக்களுக்கெதிரான சட்டங்களை பா.ஜ.க. அரசு செயல்படுத்த நினைக்கிறது. மக்கள் உரிமையை பறிக்கும் செயலில் மட்டுமின்றி அதையும் கடந்து ஜாதி மதம் உருவாக்கி தமிழர்களுக்கு எதிரான முயற்சியிலும் தமிழ்நாட்டிற்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.
படிப்பு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. அரசு வேலைவாய்ப்பு இல்லை. 500, 1000 செல்லாது என அறிவித்து கருப்பு பணம் ஒழிப்போம் என்றார்கள் அதுவும் இல்லை. தவறான கொள்கையை கடைபிடிக்கும் பா.ஜ.க.வை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தந்து விடக்கூடாது. வரும் தேர்தலில் கூட ஏதாவது ஓரு சிறு விஷயத்தை கையில் எடுத்து ஜாதி மதத்தை கூறி பிரிக்க நினைப்பார்கள். அதற்கு இடம் அளித்து விடக்கூடாது.
உங்களோடு நின்று பணியாற்றும் இயக்கம் தி.மு.க. ஒன்றிய அரசோடு சேர்ந்து அ.தி.மு.க. மக்கள் விரோத பறிப்பு செயலில் ஈடுபட வருவார்கள் இடமளிக்க வேண்டாம். தமிழகத்தை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கவும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *