கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
![கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/11/download-15.jpg)
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கவர்னர் மாளிகையில் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது,
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது , முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)