திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி உலக திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது வருகிறது. இந்த நிலையில் இன்று உலக திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி குறள் மாவட்டம் சார்பில் கையழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.காலை நேரத்தில் கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்காவுக்குள் நடைபயணம் மேற்கொண்டவர்களை சந்தித்து கையெழுத்து பெறப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி இந்த கோரிக்கையை ஆதரித்து நிறைய பேர் கையெழுத்து போட்டனர்,இன்னும் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த கையெழுத்து பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி […]
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் இன்னர் வீல் கிளப் கோவில்பட்டி இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடத்தின. 80 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமல வாசன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் துரை பத்மநாதன், டாக்டர் சுதா மற்றும் சங்க பட்டய தலைவி ஜெயஸ்ரீ ஆகியோர் சிறப்புரை […]
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் மூலம் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளை அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது.இதில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் […]
நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். காலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.தூசு மற்றும் அதிக உஷ்ணம் போன்றவை நமது உடலை பாதிக்காமல் இருப்பதற்கு நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது தலை மற்றும் உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.எண்ணெய் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை நிறைந்து உபரி நீர் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீரானது […]
தமிழக, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-அன்புள்ள மாவட்ட ஆட்சியர்களே! வணக்கம், மாவட்ட மக்களிடத்தில் முக்கிய செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருப்பதையும், அதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது. தொழில் நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் “தண்டோரா” போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் […]
சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும்,குறைந்த அளவு பால் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே பதில்:- விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து சர்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்பது இவர்களுக்குக் கைவந்த கலை. தமிழகம் முழுவதும் 37 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மாவட்டத்தில் முதல் விதைப்பாக ஆடி 18ம் பெருக்கு முன்னிட்டு முதல்கட்டமாக நிலக்கடலை விதைப்பு செய்து வருகின்றனர். அதன் பின்னர் புரட்டாசி முதல் வாரத்தில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, வெள்ளைச்சோளம்,கம்பு, மிளகாய், வெங்காயம் பருத்தி பெருமளவில் பயிரிடப்படும்.தனியார் விதை நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு விவசாயிகளை கவரும் வகையில் கிராமம் கிராமமாக தங்கள் நிறுவன விதைகளை விளம்பரம் செய்து வருகின்றன. ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழிக்கு ஏற்ப […]
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு: சி.பி.ஐ.விசாரணை உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கவனித்து வந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது.2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ். பாரதி புகார் கூறினார்.சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் […]
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புதுமை நகரில் புனித பரலோக மாதா திருத்தலம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின விண்ணேற்பு பெருவிழா வருகிற 6 -ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடக்கிறது.6 -ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.காமநாயக்கன்பட்டி திருத்தல ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.திருவிழாவில் […]