இந்திய சுதந்திரதின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சம்பந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினரும். நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினரும் கலந்து கொண்டனர். வழக்கமாக இரு கட்சி நிர்வாகிகள் ஒரு இடத்தில் கலந்து கொண்டால் மோதல்உருவாக்கி பரபரப்பு ஏற்படுவது வழக்கம், ஆனால் இன்றைய சம்பந்தி விருந்து நிகழ்ச்சியில் இரு கட்சியினரும் கலந்து கொண்டாலும் எந்த வித மோதலும் இல்லாமல் அமைதியுடன் நடந்து கொண்டார்கள். […]
கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தெருவுக்கு இன்று வீர சாவர்க்கர் தெரு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் தெருவின் ஒரு கட்டிட சுவரில் நகராட்சி என்று குறிப்பிட்டு வீரசாவர்க்கர் தெரு என்று எழுதி பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.சுதந்திரதினமான இன்று ஒரு தெருவில் சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒருவரின் பெயர் இருந்ததால் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கருதினார்கள். ஆனால் அது நகராட்சி சார்பில் எழுதப்படவில்லை, […]
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கடந்த1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளர் கனல் கண்ணன் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரின் கோவிலில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் சாமிதரிசனம் செய்கின்றனர். ஆனால், கோவிலுக்கு எதிரே கடவுளே இல்லை என்று கூறியவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்று […]
2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எம்.சுதேசன் பெயர் இடம் பெற்றுள்ளது.போலீஸ் சேவையில் எந்தவித குறைபாடு மற்றும் புகார்கள் இன்றி செயல்படுதல், கோர்ட்டு மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தல், சட்டம் -ஒழுங்கு பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது பெற இருக்கும் இன்ஸ்பெக்டர் சுதேசன், […]
கோவில்பட்டி வட்டார நூலகத்தில் 75 வது சுதத்திர தின பவள விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் ரவீந்தர் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.நூலகப் புரவலர் முத்துப்பாண்டியன், தலைமை ஆசிரியர் பணி ஓய்வு உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் அழகர்சாமி அனைவரையும் வரவேற்றார்.சுதந்திர தினஅமுதப் பெருவிழாவை முன்னிட்டு 14.8.22 அன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை, ஒவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குசிறப்பு விருந்தினர் சுவீடன் நாட்டு வானொலி […]
கோவில்பட்டி மில் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியில் வைத்து 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இது கோவில்பட்டி ரோட்டரி கிளப்பின் தத்தெடுத்த பள்ளியாகும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை தலைமையாசிரியை ராஜசரஸ்வதி வரவேற்று பேசினார், ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி நிகழச்சியில் விநாயகா ரமேஷ் , நாராயணசாமி, பரமேஸ்வரன், சீனிவாசன் , பூல் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, என்ஜினியர் நாராயணசாமி, ரமேஷ் குமார், மாரியப்பன் சுரேஷ் மாரிச்சாமி ,முத்து […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி விழா நடத்தப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆலயத்தில் விண்ணேற்பு […]
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார்கள். கோவில்பட்டி வில்லிசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் ப.வேலன் ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காசிராஜன், உறுப்பினர்கள், கோவில்பட்டி தொகுதி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவர்க்கும் இனிப்பு […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கொண்டைய ராஜு ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு ஓவிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்கியா மஹாலில் நடந்த இந்த பயிற்சி பட்டறையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓவிய பயிற்சி பெற்று ஓவியங்களை வரைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட […]
பனி பிரதேசம்…கடுங்குளிர்…சாலையில் வளைந்து வளைந்து சென்றது அந்த பஸ். பல்வேறு மாநிலத்தவரும் பஸ்சில் வந்தனர். பெண்கள்,முதியவர்கள், குழந்தைகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் வந்தார்கள்.எல்லோரும் மலை பகுதியில் உள்ள அழகிய பூங்காவை கண்டு களிக்க சென்றனர்.குளிர்காற்று வீசியது.பனிக்குல்லாய் மாட்டியபடி பயணிகள் இருந்தனர்.தமிழ் நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு வாலிபர்கள் அந்த பஸ்சில் கடைசி சீட்டில் அமர்ந்தபடி ஜாலியாக பேசிகொண்டு இருந்தனர்,டிரைவர் பஸ்சை லாவகமாக ஓட்டிச்சென்றார். கண்டக்டர் அருகில் இருந்தார். மதியம் ஒரு மணி…பஸ்…வழியில் முக்கிய இடத்தில் நின்றது. […]