சுதந்திரதின விழாவில், தலைவர்கள் வேடமணிந்த மாணவர்கள்
![சுதந்திரதின விழாவில், தலைவர்கள் வேடமணிந்த மாணவர்கள்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/688b3a9d-666c-4f95-beb4-75764c6ce5b3-1-850x384.jpg)
கோவில்பட்டி மில் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியில் வைத்து 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இது கோவில்பட்டி ரோட்டரி கிளப்பின் தத்தெடுத்த பள்ளியாகும்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/d560db79-3a2f-48e7-8281-d0724caddc84-512x1024.jpg)
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை தலைமையாசிரியை ராஜசரஸ்வதி வரவேற்று பேசினார், ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி நிகழச்சியில் விநாயகா ரமேஷ் , நாராயணசாமி, பரமேஸ்வரன், சீனிவாசன் , பூல் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, என்ஜினியர் நாராயணசாமி, ரமேஷ் குமார், மாரியப்பன் சுரேஷ் மாரிச்சாமி ,முத்து செல்வம் ,முன்னாள் தலைவர் விக்னேஸ்வரன், முன்னாள் செயலாளர் தயல் சங்கர் ,வீராசாமி, பத்மநாபன், செந்தில்குமார், இளங்கோ மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி நன்றி கூறினார், பள்ளி மாணவ மாணவிகள் தேச தலைவர்கள் வேடமணிந்து வந்தனர், பேச்சு போட்டி, ஓவிய போட்டி மற்றும் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)