• April 20, 2024

துப்பாக்கி முனையில்…சிறுகதை

 துப்பாக்கி முனையில்…சிறுகதை

பனி பிரதேசம்…கடுங்குளிர்…
சாலையில் வளைந்து வளைந்து சென்றது அந்த பஸ். பல்வேறு மாநிலத்தவரும் பஸ்சில் வந்தனர். பெண்கள்,முதியவர்கள், குழந்தைகள் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் வந்தார்கள்.
எல்லோரும் மலை பகுதியில் உள்ள அழகிய பூங்காவை கண்டு களிக்க சென்றனர்.குளிர்காற்று வீசியது.பனிக்குல்லாய் மாட்டியபடி பயணிகள் இருந்தனர்.
தமிழ் நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு வாலிபர்கள் அந்த பஸ்சில் கடைசி சீட்டில் அமர்ந்தபடி ஜாலியாக பேசிகொண்டு இருந்தனர்,
டிரைவர் பஸ்சை லாவகமாக ஓட்டிச்சென்றார். கண்டக்டர் அருகில் இருந்தார். மதியம் ஒரு மணி…பஸ்…வழியில் முக்கிய இடத்தில் நின்றது. சிலர் பஸ்சைவிட்டு இறங்கி சூடாக டீ குடித்தார்கள்.
ஐந்து நிமிடம் கழிந்தது. பஸ் மீண்டும் புறப்பட்டது. அப்போது பஸ்சில் புதிதாக ஒரு நபர் ஏறியதை யாரும் கவனிக்கவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் அந்த பூங்காவை பஸ் அடைந்துவிடும். பனி பூ மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த மலை பகுதிக்கு தினமும் இரண்டு பஸ்கள் மட்டுமே போகும். மாலையில் மலை பூங்காவிலிருந்து திரும்பிவிடவேண்டும்.
காட்டு விலங்குகள் அதிகம். யானை ,புலி திடீரென்று ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபடும். அந்த நேரத்தில் பஸ் நின்று செல்வதை தவிர வேறு வழி இல்லை.
இன்று அந்த தொல்லை இல்லை என்ற மகிழ்ச்சியில் டிரைவர் பஸ்சை வளைவில் மெதுவாக திருப்பினார். அப்போது துப்பாக்கியுடன் எழுந்த வாலிபர் டிரைவரின் கழுத்தில் அழுத்தினார்.
அச்சத்தில் உறைந்த டிரைவர் மெல்ல பஸ்சை நிறுத்த முயன்றார். அந்தவாலிபர் பஸ்சை வேறு வழியில் ஓட்டசொன்னான்..இல்லாவிட்டால் சுட்டுவிடுவேன். என்று மிரட்டினான்.
பஸ்சில் உள்ள பயணிகளை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக சொன்னான். எல்லோருக்கும் கை கால்கள் நடுங்கின. பஸ் டிரைவர்…அவன் சொன்னபடி பஸ்சை ஓட்டினார்.
அந்த குளிரிலும் அவருக்கு வியர்த்தது. பஸ்சில் உள்ள பயணிகளை காக்கவேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஓடியது.அதனால் மவுனமாக அவனிடம் பேசினார்.
அவன் பேச்சில் அவன் தீவிரவாதி என்றும் அவன் கூட்டாளிகள் இரண்டுபேரை பிடித்து ஜெயிலில் போட்டிருப்பதும் தெரிந்தது .அவர்களை விடாவிட்டால் பயணிகளை உயிருடன் விடமாட்டேன் என்று எச்சரித்தான்.
டிரைவரின் செல்போனை வாங்கி அந்தபகுதி உயர்போலீஸ் அதிகாரிக்கு தீவிரவாதி வாலிபன் பேசினான். இன்னும் ஒருமணி நேரத்தில் ஜெயிலில் இருக்கும் தனது கூட்டாளிகளை விடவேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு பயணியை சுட்டுக்கொன்று கீழே வீசிவிடுவேன் என்று நிபந்தனை விதித்தான்.
உயர் போலீஸ் அதிகாரி…அவனிடம் .நீ யார் எங்கிருந்து பேசுற.. என்று கடுமையான குரலில் அதட்டினார். அதை கேட்டதும் தீவிரவாதி வாலிபர் முகம் சிவந்தது .போன் இணைப்பை துண்டித்தான் .
பஸ்சை ரோட்டு பகுதியை தாண்டி ஒரு பாழடைந்த பங்களா அருகே நிறுத்த சொன்னான். பஸ் நின்றது .யாரும் பஸ்சைவிட்டு இறங்க கூடாது. அப்படி இறங்கினால் டிரைவரை சுட்டுவிடுவேன் என்றான். எல்லோருக்கும் நெஞ்சு பக் பக் என்று அடித்தது.
உயர் போலீஸ் அதிகாரி அந்த செல்போனில் வந்தார். தீவிரவாதி வாலிபர் தனது கோரிக்கையை நிறைவேற்றினால்தான் பேசுவேன். ஒரு மணிநேரம் டைம் கொடுக்கேன். என் நண்பர்களை விடுவிச்சிட்டு பேசுங்க என்றான்.
உயர் போலீஸ் அதிகாரி எச்சரிக்கும் வகையில் மீண்டும் பேசினார். தீவிரவாதி வாலிபர் அவரை திட்டிவிட்டு அலைபேசி இணைப்பை துண்டித்தான்..
தீவிரவாதி வாலிபர் கோபத்தின் உச்சிக்கு சென்றான். ஒருமணி நேரம் முடிந்துவிட்டது. எனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஒரு பயணியை வெளியே அனுப்புகிறேன் பிணமாக என்று கத்தினான்.
பயணிகளை நோக்கி குறிவைத்தான். யாரை சுடப்போகிறான் என்று தெரியாமல் அனைவரும் பயத்தில் தவித்தனர். உங்களில் யாராவது ஒருவர் பலியாக முன்வாருங்கள்.. குயிக் குயிக் என்று கத்தினான். ஒரு முதியவர் எழுந்தார். அவர் சிங். என்னை சுட்டுக்கோ..மற்றவர்களை விட்டுவிடு என்றார்.
தீவிரவாதி வாலிபர் சிரித்தான். அவரை நெருங்கினான். அப்போது பஸ்சில் கடைசியாக இருந்த தமிழக வாலிபர்…முதியவரை பார்த்து நீங்க உட்காருங்க..உங்க தியாகத்தை மதிக்கிறோம்.. என்றான்.
தீவிரவாதி வாலிபரை பார்த்து இங்கே வா..என்னை சுடு என்று அழைத்தான். அவன் ஹா..ஹா என்று சிரித்தபடி தமிழக வாலிபரை நெருங்கி வந்தான். எல்லோரும் பதட்டத்தோடு பார்த்தனர்.
தீவிரவாதி வாலிபர் தமிழக வாலிபரின் நெஞ்சை குறிவைத்தான். அப்போது தமிழக வாலிபர் மெதுவாக…உனக்கு தேவை ஒரு உயிர். ஒரு பிணம் பஸ்சைவிட்டு கீழே போகணும்..அவ்வளவுதானே…நீங்க ஏன் சுடணும்.துப்பாக்கியை கொடுங்க…என்னை நானே சுட்டு சாகிறேன். நானும் தியாகம் பண்ணுனமாதிரி ஆச்சு. உங்க எண்ணமும் நிறை வேறிடும்…சரிதானா என்றார்.
அந்த தீவிரவாதி வாலிபரும்..ஓரு பிணம் பஸ்சிலிருந்து விழுந்தா போதும்..ம்..சீக்கிரம் என்று துப்பாக்கியை தமிழக வாலிபரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி தீவிரவாதி வாலிபரிடம் எப்படி சுடவேண்டும்..என்றுவிளக்கமாக கேட்டுவிட்டு தனது நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையை வைத்தார்.
எல்லோரும் வேண்டாம் வேண்டாம் என்று சத்தம் போட்டார்கள். அவன் கேட்கவில்லை. எனக்கு கேன்சர் இருக்கு. எந்த நேரத்திலும் எனக்கு சாவு வரும். அதை நினைத்து நினைத்து சாவதைவிட இப்படி தியாகம் செய்வதை பெரிதாக நினைக்கிறேன் என்றான்.
தீவிரவாதி வாலிபர் …எக்காளமாக சிரித்தான். க்கியூக்..க்கியூக்..என்று அவசரப்படுத்தினான். தமிழ் நாட்டு வாலிபர் துப்பாக்கி விசையை அழுத்த விரல்களை விரலை கொண்டு சென்றார். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டார்கள்.
அந்த நேரத்தில் டூமில் என்று சத்தம் கேட்டது.எல்லோரும் பயத்துடன் கண்களை விழித்து பார்த்தார்கள். தீவிரவாதி வாலிபர் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே சுருண்டுவிழுந்து செத்தான்.தமிழக வாலிபர் அந்த பிணத்தை பஸ்சிலிருந்து கீழே உருட்டிவிட்டார்.

சுற்றிவளைத்திருந்த போலீஸ் படையினர் அங்கே விரைந்து வந்தனர். தீவிரவாதி வாலிபரை சுட்டுக்கொன்ற தமிழக வாலிபரை உயர் போலீஸ் அதிகாரி பாராட்டினார்.

தீவிரவாதிகள் மிரட்டல் இருந்ததால் பஸ்சில் கடைசி சீட்டில் மாறு வேடத்தில் தமிழகத்தை சேர்ந்த நான்கு ஜ.பி.எஸ் பயிற்சி போலீஸ் அதிகாரிகள் இருந்ததை பயணிகளும் கவனிக்கவில்லை.
வே.தபசுக்குமார்-தூத்துக்குடி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *