ஊராட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி தலைவர்கள் மரியாதை
![ஊராட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி தலைவர்கள் மரியாதை](https://tn96news.com/wp-content/uploads/2022/08/9084b07b-a522-45ca-93f9-18d81e4db2ca-850x560.jpg)
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார்கள். கோவில்பட்டி வில்லிசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் ப.வேலன் ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காசிராஜன், உறுப்பினர்கள், கோவில்பட்டி தொகுதி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவர்க்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)