நாளை (ஜூன் 26) பிரதோஷம், 28-ந் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி 26-ந்தேதி முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.கோவிலில் இரவில் பக்தர்கள் தங்கக்கூடாது. 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், கோவிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மேலும் ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது. மழை […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 82 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவ […]
கோவை ஈஷா யோகா மையத்தில் தியானலிங்கம் பிரதிஷ்டை 23 -வது ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்து, பவுத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்தவ, சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன. தியானலிங்க கருவறையில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது. இதைத் தொடர்ந்து ‘புத்த மத உச்சாடனைகளை ‘சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினர் அர்ப்பணித்தனர். இதேபோல், அமெரிக்க பழங்குடி மக்களின் பாடல்கள், தென் […]
உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு: 6400 விண்ணப்பதாரர்களில் 989 பேர் பங்கேற்கவில்லை
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று (25.6.2022) தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடார் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது.மேற்படி தேர்வு எழுதும் மையங்களுக்கு தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு, […]
சென்னை போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கபிலன். இவருடைய மனைவி வாணி (வயது 57). இவர் கே.கே. நகரில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று மாலை வாணி, அவரது தங்கை எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது சாலையையொட்டி இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த காரின் […]
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீசார் நேற்று (24.6.2022) கருணாநிதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் (வயது 39) என்பதும் அவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே முருகனை கைது செய்து […]
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த தமிழக கவர்னருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பளிக்கப்பட்டது.தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரானது கவர்னர் மீது தெளிக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்தார்.பின்னர் கார் மூலமாக, புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற கவர்னர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 29.6.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய […]
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்சான்று சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட தபால் நிலையங்களின் முதுநிலை சூப்பிரண்டு மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-மாநில அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள், வரும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 3௦ வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோவிட்-19 தோற்று நோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர […]
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது.எனவே, நாளை25ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எம். துரைசாமிபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சவலாப்பேரி, வாகைகுளம் ஆகிய பகுதிகளுக்கும். பசுவந்தனை உபமின்நிலையத்தில் […]