சதுரகிரி மலைக்கோவில்: பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
நாளை (ஜூன் 26) பிரதோஷம், 28-ந் தேதி ஆனி மாத அமாவாசையையொட்டி 26-ந்தேதி முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.கோவிலில் இரவில் பக்தர்கள் தங்கக்கூடாது. 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், கோவிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும்
ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது. மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருகிறது.