தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
![தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2022/06/179eed6b-9bb2-49e9-b567-8f84da10a524-850x560.jpg)
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீசார் நேற்று (24.6.2022) கருணாநிதி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் (வயது 39) என்பதும் அவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே முருகனை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 6,120/- மதிப்புள்ள 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)