மரம் சாய்ந்து கார் மீது விழுந்தது; வங்கி பெண் மேலாளர் பரிதாப சாவு

 மரம் சாய்ந்து கார் மீது  விழுந்தது; வங்கி பெண் மேலாளர் பரிதாப சாவு

சென்னை போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கபிலன். இவருடைய மனைவி வாணி (வயது 57). இவர் கே.கே. நகரில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை வாணி, அவரது தங்கை எழிலரசியுடன் காரில் லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி.ராஜன் சாலை வரும் வழியில் இருக்கும் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையையொட்டி இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த காரின் மீது மரம் விழுந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அசோக் நகர், கிண்டி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வாணி, மரம் விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக், வாணியின் தங்கை எழிலரசி ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *