தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை 45 பேருக்கு 2 நாட்கள் ‘காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்” இன்று (4.6.2022) தொடங்கியது, பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-மனிதர்களின் வாழ்க்கை பயணத்தில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரக்கூடியது. அதை சரி சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவம் நமக்கு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயந்து, தவறான வழிகளில் செல்லாமல், அதை தீர்ப்பதற்கான […]
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா என்பவரது மனைவி சகாய சித்ரா (வயது 52). இவர் போல்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவரிடம் இருந்து 7 ¼ பவுன் தங்க தாலி செயினை பறித்த வழக்கில் லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் லேடன் (எ) பின்லேடன் (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் வடபாகம் காவல் நிலைய […]
கோவில்பட்டி கடலைமிட்டாய் மிகவும் பிரபலமானதாகும். கோவில்பட்டி என்றாலே கடலைமிட்டாய் தான் நினைவுக்கு வரும். கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வானம் பார்த்த கரிசல் பூமியாகும். இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு.இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் இந்தியா முழுவதும் விறபனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இவ்வளவு பெருமை வாய்ந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாயின் […]
தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக விதவை ஆதரவற்ற விதவை கணவனரால் கைவிடப்பட்ட பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஒரு பெண்ணுக்கு 5 ஆடுகள் வீதம் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டபிடாரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் […]
கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. கோழிக்கோடு, கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.அங்கு கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், நேற்றும் 1465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி, […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது 59). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மா பட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி உமாகோமதி(55). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், ஓய்வூதிய பணத்தை வாங்கி கடனை செலுத்தியதாகவும் […]
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.தற்போதுள்ள பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.இந்த பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணியும் கடந்த 3 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.இதனிடையே புதிய […]
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.வீடு பெறும் எழுத்தாளர்கள் அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாளில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த சங்கரநாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியராக திருநெல்வேலி பயிற்சி துணை ஆட்சியராக இருக்கும் மகாலட்சுமி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி புதிய கோட்டாட்சியர் மகாலட்சுமியின் தந்தை தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்துக்கொண்டு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். உதவும் உள்ளங்கள் என்ற சமூக அமைப்பின் உதவியால் பள்ளிக்கல்வியை முடித்த மகாலட்சுமி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரியில் 2௦15-ம் ஆண்டு பி,டெக். படித்து முடித்தார்.பின்னர் […]
கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் 58 ஆம் ஆண்டு கொடை விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.இதையொட்டி இன்று அன்னதான திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், 24-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா […]