100 பெண்களுக்கு தலா 5 ஆடுகள்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக விதவை ஆதரவற்ற விதவை கணவனரால் கைவிடப்பட்ட பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஒரு பெண்ணுக்கு 5 ஆடுகள் வீதம் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டபிடாரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் அனிதா. ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமார் 100 பெண் பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா , தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் உமரி சங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளரும் பஞ்சாயத்து தலைவருமாகிய இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜன், வட்டாட்சியர் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், வெங்கடாசலம், உதவி இயக்குனர்கள் ஜோசப் ராஜன் (தூத்துக்குடி), விஜயஸ்ரீ (கோவில்பட்டி) மற்றும் கால்நடை மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.