தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவன்வடலி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). உப்பள தொழிலாளி. இவருடைய மனைவி முத்து சந்தனம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலையில் சண்முகராஜ் தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.தலைவன்வடலியை அடுத்த ஆரையூர் கல்வெட்டி பகுதியில் சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 மர்மநபர்கள் திடீரென்று சண்முகராஜை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. அதேபோல் தமிழக அரசும் உதவ முன்வந்தது. இலங்கைக்கு அரிசி, பால்பவுடர் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.மத்திய அரசும் அனுமதி அளித்து விட்டது.அதனைத் தொடர்ந்து ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் 2.6.2022 முதல் 12.6.2022 வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமானது தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 வரை மட்டும் நடைபெறும். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி உபகரணங்கள் வழங்கப்பட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சி […]
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவுக்கு மேல் 1.30 மணி அளவில் சாமக்கொடை நடைபெற்றது.அப்போது தெய்வச் செயல்புரத்தை சேர்ந்த சாமியாடியான முருகன் (வயது 65) என்பவர் வேட்டைக்கு புறப்பட்டு சென்றார். சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்கு சென்றனர்.அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை […]
திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் திருச்செந்தூர் காந்திபுரம் விலக்கு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டnar.அப்போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய அனுமதியின்றி சரள் மணல் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவரான வெற்றிவேல் (35) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 4½ யூனிட் சரள் மணல் மற்றும் […]
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் வாரிசுகளில் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படுகிறது.அதன்படி 2020 – 2021 ஆண்டில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வருபவர்களின் வாரிசுகளின் உயர்கல்விக்கான 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை முதல் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மேலமுடிமன் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் கார்த்திக் (வயது 22) ஆட்டோ டிரைவர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மாலினி என்ற மனைவியும், மகிஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளனர். இவரது அண்ணன் செல்வகுமார் (24). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சாத்தூர் அமீர்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திக் தனது தாயாரிடம் 3.5 பவுன் நகையும் ரூ.1.5௦ லட்சமும் வாங்கினாராம். இதையறிந்த […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக .நாராயணன் என்பவர் இருந்தார்.இவர் முன்னதாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த போது தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இறுதி உத்தரவாக தற்போது வகிக்கும் பதவியிலிருந்து இரு நிலைகள் கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராக பதவிஇறக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கலெக்டர் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கதன் வெளியிட்டுள்ளார்.கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுசெயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பார்வையாளர் சசிகலா புஷ்பம் ஆகியோரின் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறி இருக்கிறார்.நிர்வாகிகள் விவரம் வருமாறு:-மாவட்ட துணை தலைவர்கள்- சி.தங்கம், எஸ்,சரஸ்வதி, டி,பல்க் பெருமாள், எஸ்.பி.வாரியார், எஸ்.சிவராமன், எஸ்.செல்வராஜ், டி,சுவைதார், எஸ்,ரேவதி.மாவட்ட பொது செயலாளர்கள்- ஆர்.சிவமுருக ஆதித்தன், டி.ராஜா, […]
தூத்துக்குடி ️தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமருதூர் பகுதியை சேர்ந்த பொய்யாழி மகன் போஸ் (வயது 28) என்பவருக்கும் வேடநத்தம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (26) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று மாரிராஜ் மற்றும் அவரது நண்பரான வேடநத்தம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மகன் கார்த்திக் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் போஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020