தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இம்மாதத்தின் முதல் புதன் கிழமையான இன்று (6.7.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 34 பேர் தங்கள் குறைகளை போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாரிப்பாண்டியன். இவர் சென்னையில் ஒரு சுவீட் கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாரித்தாய். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3-வது மகள் மகாலட்சுமி (வயது 1). நேற்று மாலை மாரித்தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். குழந்தை மகாலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தது. மூத்த பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் சென்று வந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து குழந்தை மகாலட்சுமியை காணவில்லை. அவள் அக்காள்களுடன் […]
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வருகிறார். உடன்குடி தேரியூரில் உள்ள இரும்புக்கடையில் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு செந்தில்குமார் காரில் நேற்று மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.உடன்குடி-குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2பேர் காரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் […]
தமிழகத்தின் தனித்துவத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், ஸ்பிக் நிறுவனமும் இணைந்து ‘நெய்தல்- தூத்துக்குடி கலை விழா’ என்ற விழாவை நடத்துகிறது.இந்த விழா வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 4 நாட்கள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கலை விழா நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 300 கிராமிய கலைஞர்கள் கலந்து […]
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது.இந்த கோவிலில் தமிழ் மாதங்களான ஆடி, புரட்டாசி தவிர மற்ற 10 மாதங்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இது தவிர வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, மாசித் திருவிழா என நான்கு முக்கிய திருவிழாக்களும் நடக்கிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் […]
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பாலித்தீன் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு தமிழகத்தில் ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் எந்த தடிமன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்பதில் குழப்பம் இருப்பதால் பல கடைகள், வணிக நிறுவனங்களில் பாலீத்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக தடை […]
இலங்கை தலைநகர் கொழும்புவில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருபவர் டாக்டர் ராமசுப்பு . இவர் கடந்த 18.6.2022 மற்றும் 19.6.2022 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபாடு செய்வதற்காக வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார். 18.6.2022 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளில் டாக்டர் ராமசுப்புவின் 1 வயது பேரனுக்கு திடீர் வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டான்.இதனால் ராமசுப்பு மருந்து வாங்குவதற்காக விடுதியிலிருந்து வெளியே […]
தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் (39) என்பவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 29.6.2022 அன்று இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோன்று அன்றைய தினமே பிரையண்ட் நகர் 3-வது தெருவில் பரமேஸ்வரன் (54) என்பவரின் மளிகை கடையிலும் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம், ரூ 2,000 ஆயிரம் […]
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 32), சார்லஸ் (32), மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகிய 3 பேரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 ஊராட்சி மன்ற தலைவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சியில் இணைந்ததாக கூறப்பட்ட 13 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது விளாத்திகுளம் […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)