கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-சென்னையில் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் , அதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதற்கு பிரதமருக்கு நன்றி.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம் குழப்பம் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது .அ.தி.மு.க. ஆட்சியில் கோவில்பட்டி 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட்ட போது ஒரு கோடியே […]
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன் மற்றும் அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் கொடை விழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.கொடை விழாவை முன்னிட்டு நாளை காலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 3-ந்தேதி காலையில் காப்புக்கட்டுதல், 5-ந் தேதி அண்ணா கீழத் தெருவில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் முன்பு விளக்கு பூஜை நடைபெறுகிறது.6-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் ஊர் விளையாடல் அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு […]
கயத்தாறு பஜாரில் ராஜாபுதுக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை பயன்படுத்துவதை ரோந்து சென்ற போலீசார் கண்டு பிடித்தனர். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட பெட்டிக்கடையில் புகையிலை பொருளை வாங்கியதாக தெரிவித்தான்.அந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். கடையில் சோதனை நடத்தியதில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ குட்கா மற்றும் 58 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர்களான உச்சினிமாகாளி(வயது 37), மணிகண்டன்(30), சுடலைமணி( […]
கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கேரளாவில் சென்டிரிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு தினேஷ் பாபு (வயது 20) என்ற மகனும், கிருஷ்ணபிரியா (16) என்ற மகளும் உண்டு. தினேஷ்பாபு கோவில்பட்டியில் உள்ள கல்லூரியிலும், கிருஷ்ணபிரியா தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பும் படித்து வந்தனர்.ராஜ்குமாரின் சொந்த ஊரான கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்து குமாரகிரியில் நேற்று முன்தினம் கோவில் கொடை விழா நடந்தது. எனவே சண்முகத்தாய் தன்னுடைய மகன் […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல பாண்டியாபுரம் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த சிங்கராஜ் மகன் அருணாசலம் (வயது 45) மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பை சேர்ந்த சேர்ந்த கனகராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.கோவில்பட்டியை சேர்ந்த செய்தியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர்.நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகி மற்றும் உதவியாளர் என்று கூறிக்கொள்பவர்கள் சிலர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேரை வெளியேற சொல்லி இருக்கிறார்கள். ஏன் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் பதில் சொல்லாமல் , இந்தி பேச […]
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மூக்கையா மகன் மாரிசெல்வம் (21) மற்றும் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சங்கர் குரு (35) என்பதும், […]
விளாத்திகுளம் அருகே உள்ள வி. வேடப்பட்டி கிராமத்தில் பருத்தி, மிளகாய், முருங்கை, எலுமிச்சை, தென்னை, கொய்யா, பனை, வாழை, பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.மிக வளமையான வைப்பாறு ஆற்றுப்படுகை கொண்ட வண்டல் மண் வளம் கொழித்து கொண்டு உள்ளது. இந்த வளமையான மண்ணில் விவசாயத்தை சீரழிக்கும் வகையில் தனியார் காற்றாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே வேடப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் காற்றாலை நிறுவ தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேற்படி தீர்மானத்தின் […]
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வார் மாலையம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா கடந்த 13-ம் தேதி நாட்டுகால் நடுதலுடன் தொடங்கியது,அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு முன்புறம் சாலையின் ஒரு பகுதியில் அடுப்பு பற்ற வைத்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.சுவாமி -அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து […]
கோவில்பட்டி நகரில் மிக முக்கியமான சாலை புதுரோடு ஆகும். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கும், சாத்தூர், சிவகாசி வழியாக வரும் வரும் வாகனங்கள் தூத்துக்குடி செல்வதற்கும் இந்த புதுரோடு தான் பிரதான சாலையாகும். இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்கள் அதிகம் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும். எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுவார்கள்பல […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



