கோவில்பட்டி அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜஸ்வர்யா. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்து வருகிறார். இவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஜீவா இல்லத்தில் நடந்தது. நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாணவி ஐஸ்வர்யாவின் ஒரு செமஸ்டருக்கான கல்வி கட்டணத்தை அவருக்கு வழங்கினார். மேலும், நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு, நகர உதவி செயலாளர்கள் […]
நெல்லை மாவட்டம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இங்கு 969 ச.கி.மீ பரப்பளவுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இங்கு ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் தேயிலை தோட்டங்கள் 99 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் […]
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் அவர் உடல்நலம் தேறி உள்ளார் என தகவல் வெளியானது. சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வந்தது. […]
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, ஆக்சியம்-4 என்ற பெயரிலான திட்டத்தின்படி ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் உதவியுடன் விண்வெளி வீரர்கள் 4 பேர் அடங்கிய குழு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான, ஆக்சியமின் மனித விண்கல பயண திட்ட இயக்குநர் பெக்கி விட்சன் தலைமையிலான குழுவினர் பயணம் மேற்கொள்கின்றனர். அவர் திட்ட தலைவராக செயல்படுகிறார். அவருடைய உத்தரவின்படி, இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் அங்கேரி நாட்டை சேர்ந்த […]
சாதாரண வகுப்பு பெட்டிகளை குறைக்க வேண்டாம். ரெயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்; மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டும் வரும் ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்தநிலையில், இதோடு சேர்த்து நீண்ட தூர ரெயில் பயணங்களுக்கான ரெயில் டிக்கெட் விலையை உயர்த்தி ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ரெயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடியையும், […]
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவராக இருந்தார். .முத்து பாலகிருஷ்ணன் அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் அவர் அதிமுக கிளை செயலாளராகவும் இருந்தார்.. அந்தப் பகுதியில் சுமார் 650 ஏக்கரில் கல் குவாரி ஒன்றை ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ஒரு நபருக்கு முத்து பாலகிருஷ்ணன் […]
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திரை உலக பிரபலங்கள் பலர் மீது போலீசாரின் சந்தேக பார்வை வீச தொடங்கி இருக்கிறது. இதையடுத்து திரை உலகில் பலர் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சப்ளை செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் […]
மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று வர்ணிக்கப்.பட்ட போதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும். பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் […]
டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 கட்டணமில்லா 2-வது மாதிரி தேர்வு தூத்துக்குடியில் 28ம் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 -2025 தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. முதலாவது மாதிரி தேர்வு கடந்த 21.6.25 அன்று தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. 2வது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (28.6.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து […]
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்கு தற்போது துணைத் தேர்வு நடக்க இருக்கிறது.இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் வரும் 25ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளோர் மேற்கண்ட இணைய […]







